இன்று திரைக்கு வரும் படங்கள் – ஒரு பார்வை
Page 1 of 1

தமிழ் திரையுலகில் இன்று முதல் ‘முரண்’, ‘வாகை சூட வா’, ‘வெடி’ என மூன்று திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கிறது. இப்படங்களின் சிறு அறிமுகத்தை இங்கே தருகின்றோம்.
முரண்
இயக்குனர்களான மிஷ்கின், சாஜிகைலாஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜன் மாதவ், இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் முரண். இப்படத்தில் யதார்த்த நாயகன் சேரனும், பிரசன்னாவும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
வெவ்வேறு துறைகளில் இருக்கும் சேரனும், பிரசன்னாவும் ஒரு பயணத்தின்போது சந்தித்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையை பற்றிய இருவரின் சித்தாந்தங்களும் வெவ்வேறானவை. வாழ்க்கை எப்படி அமைகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான் ஒருவன்,. மற்றொருவன், தான் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள துடிக்கிறான்.
தங்களது இலக்கை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைக்கும் இருவரும் எதிர்பாராத திருப்பங்களையும், குழப்பங்களையும் எதிர்கொள்கிறார்கள். இரண்டு பேரும் அந்த சூழ்நிலைகளில் இருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
வாகை சூட வா
‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணத்தின் அடுத்த படைப்பு ‘வாகை சூடவா’. விமல்கதாநாயகனாகவும், இனியா கதாநாயகியாகவும் யநடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே. பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை 1966-ம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப் பட்டிருப்பதால், அந்த காலத்தை அப்படியே நம் கண்ணில் நிலைநிறுத்துவதற்காக,அருப்புக் கோட்டை அருகே 2 கோடி ரூபாய் செலவில் ‘கண்டெடுத்தான் காடு’என்ற கிராமத்தை உருவாக்கி, அதில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கின்றனர்.
இந்த கிராமத்திற்கு ஆசிரியராக வரும் விமலுக்கும், அதே கிராமத்தில் டீக்கடை வைத்திருக்கும் இனியாவிற்கும் ஏற்படும் காதலை மையமாக்கி இப்படத்தை சுவராசியமாக உருவாக்கி இருக்கிறாராம் சற்குணம்.
வெடி
2008-ல் தெலுங்கில் வெளியான ‘சவுரியம்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘வெடி’. ‘எங்கேயும் காதல்’ படத்திற்குப் பிறகு, தமிழில் பிரபுதேவா இயக்கியுள்ள படம் இது.
இப்படத்தில் விஷால், சமீரா ரெட்டி, பூனம் கௌர், விவேக், ஷாயாஜி ஷிண்டே, பாண்டு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரைக்கதை தூத்துக்குடியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருக்கும் விஷால் தனது தங்கையை தேடி கல்கத்தா செல்கிறார். அங்கே ஏற்படும் தகராறில் அங்கே உள்ள தாதாவிற்கும் அவருக்கும் பகை ஏற்படுகிறது.
அந்த தாதாவால் கதாநாயகிக்கும் பிரச்சினை இருக்கிறது. தாதாவினால் அவரது தங்கைக்கும் பிரச்சினை இருக்கிறது. இதை இரண்டையும் எப்படி விஷால் சமாளிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திரைக்கு வந்துள்ள அமலாபாலின் படங்கள்
» வெள்ளியன்று திரைக்கு வரும் ஒத்தவீடு
» கௌதம், ஹாரிஸ் - திரைக்கு வரும் பூச்சாண்டிகள்
» மே 30ம் தேதி திரைக்கு வரும் நான் ஈ
» இந்த ஆண்டு தீபாவளிக்கு 4 படங்கள் திரைக்கு வந்துள்ளன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum