ஒரு புத்திசாலி பண்ற அண்டர் ப்ளேதான் ‘சகுனி’! – கார்த்தி
Page 1 of 1

‘சிறுத்தை’க்கு இந்த வருஷம் தலை தீபாவளி. புது மாப்பிள்ளைக்கான உற்சாகக்களை இன்னும் முகத்தில் அமோகமாக இருக்கிறது. தலை தீபாவளி கொண்டாட்ட மூடில் இருந்தவரிடம் பேசினோம்.
தலை தீபாவளி கொண்டாட்டம் எப்படி ஆரம்பிக்கப் போகுது பாஸ்?
என் மனைவி ரஞ்சனியின் சொந்த ஊர்லதான் இந்த வருஷ தீபாவளி. முதல் முறையா இந்த வருஷம் தீபாவளியை கிராமத்துல கொண்டாடப் போறேன். தலை தீபாவளிங்கிறதால அவங்க வீட்டுல நிறைய ஸ்வீட் பதார்த்தங்கள் பண்றாங்களாம். இப்பவே நிறைய வெயிட் போட்டாச்சு. இதுல இன்னும் ஸ்வீட் சாப்பிட்டா என்ன ஆகுமோ? எப்படி இந்த அன்பு விருந்துல இருந்து தப்பிச்சு, கொஞ்சமாக சாப்பிட்டுத் தப்பிக்கிறதுன்னு ஒரு பெரிய திட்டமே போட வேண்டியிருக்கு. சிரிக்கிறார்.
உங்க மனைவிக்கு தீபாவளிப் பரிசாக என்ன கொடுக்கப் போறீங்க?
பிறந்த நாள், கல்யாண நாள், காதலர் தினத்துக்குத்தான் பரிசு கொடுக்கணும் தலைவா. தீபாவளிக்கு பரிசு கொடுப்பாங்களா? ரஞ்சனிக்கு இதெல்லாம் தெரியாம இருக்கு, இப்படி கேள்வி கேட்டு மாட்டி விடப் பார்க்கிறீங்களே, இது நியாயமா? (இன்னும் பலமாகச் சிரிக்கிறார்.) இந்தத் தீபாவளிக்கு அண்ணனோட ’7ஆம் அறிவு’ படம் ரிலீஸாகுது. அண்ணன் அவ்வளவு மெனக்கெட்டு, தன்னை வருத்தி நடிச்சிருக்கிற படம். அதுதான் எங்களுக்குப் பெரிய பரிசு. எங்கே இருந்தாலும், எந்த சூழ்நிலையில இருந்தாலும் முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்னு பிளான் பண்ணியிருக்கோம். இதுதான் எங்களுக்கு பெரிய கொண்டாட்டம்.
உங்க மனைவி ரஞ்சனி எப்படி பார்த்துக்குறாங்க?
சின்ன வயசுல தினமும் காலையில் எழுப்பிட்டு, எண்ணெய் தேய்ச்சு அம்மாதான் குளிப்பாட்டி விடுவாங்க. இப்ப எனக்குன்னு அன்பாக பார்த்துக்க ரஞ்சனி வந்திருக்காங்க. தினமும் என்னை காலையில எழுப்பி, குளிக்க அனுப்பி வைக்கிறதே அவங்களுக்கு ஒரு பெரிய போராட்டம்தான். இந்த அன்பு, அனுபவம் எல்லாம் புதுசா இருக்கு. சந்தோஷமா இருக்கு.
ஷூட்டிங் போனால் நான் வீட்டுக்குத் திரும்பி வர்ற வரைக்கும் அம்மா தூங்காம முழிச்சிட்டு இருப்பாங்க. இப்போ ரஞ்சனியும் எவ்வளவு லேட்டாக வந்தாலும், எனக்காக சாப்பிடாம காத்திருக்காங்க. சாப்பிடும்மான்னு சொன்னாலும் நான் வரணும்னு காத்திருக்காங்க. ‘நீங்க பிஸியா இருக்கிறதால இப்பதான் பேசறதுக்கு நேரம் கிடைக்குது. அப்ப தூங்கச் சொன்னா எப்படி’ன்னு கேட்கிறாங்க.
நீங்களும் உங்க மனைவியும் சேர்ந்து சமீபத்துல ரசிச்ச விஷயம்..
‘மங்காத்தா’ பார்த்தோம். ஒரு ஹீரோ இவ்வளவு தூரம் மாறி, நரை முடியோட, பக்காவான வில்லத்தனமாக நடிக்க முடியுமான்னு ஆச்சரியப்பட வைச்சிட்டார் அஜித் சார். ரொம்ப என்ஜாய் பண்ணி ‘மங்காத்தா’வைப் பார்த்தோம். அப்புறம் ‘காஞ்சனா’. பொதுவாக ஒரு த்ரில்லர் படம் பார்க்கும்போது மனைவி கூடவே இருந்தா, பயத்தை வெளியே காட்டாம, ஒரு ‘கெத்’தை காட்டுவோம். ‘இதெல்லாம் ஒண்ணுமில்லமா, பயப்படாதே’ன்னு சொல்வோம். ஆனால், என் விஷயத்துல அது உல்டாவாகிப் போச்சு. அவங்க கேஷுவலாக படம் பார்த்தாங்க. நான்தான் பயந்து சத்தம் போட்டு படம் பார்த்தேன்.மீண்டும் சிரிக்கிறார்.
‘சகுனி’ படம் பத்தி..
இன்னிக்கு கிருஷ்ண பரமாத்மா இருந்தால் என்ன பண்ணுவாரோ, அதே மாதிரி வாய் ஜாலத்தால் மத்தவங்களோட மைண்ட் என்ன யோசிக்குது என்பதை முகத்தைப் பார்த்தே புரிஞ்சுக்கிற ஒரு புத்திசாலி பண்ற அண்டர் ப்ளேதான் ‘சகுனி’. ஹீரோ நல்லவன்னு சொன்னதுமே பிடிச்சிருந்தது. இதுவரைக்கும் நான் பண்ணினது ரவுடி, ஃப்ராடு மாதிரியான ரோல்கள்தான். இது புதுசாக இருக்கும்.
படம் முழுக்க காமெடி இருந்தாலும், ஆக்ஷன் பக்காவா இருக்கும். திரைக்கதையும் வசனமும் நச்னு இருக்கும். படத்துக்குப் படம் புதுசா இருக்கணும். மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுக்கணும். அடுத்தடுத்து அதை தக்க வைச்சுக்கணுங்கிறதுலதான் என் கவனம் இருக்கு. அதனாலதான் ‘சிறுத்தை’க்குப் பிறகு நாலு மாசம் காத்திருந்து நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சகுனி.. ஆனா கிருஷ்ணர்! : கார்த்தி
» சகுனி முழுக்க அரசியல் படமல்ல : கார்த்தி
» கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்!
» சகுனி ப்ளாப் படமா… யார் சொன்னது? – கேட்கிறார் கார்த்தி
» ஏப்ரல் 14-ல் சகுனி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum