தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’

Go down

 ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ Empty ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’

Post  ishwarya Fri Apr 12, 2013 1:34 pm

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை நினைவு கூறும் வகையிலும், அவரை கௌரவிக்கும் வகையிலும் அடுத்த மாதம் ரஷியாவில நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிவாஜி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ திரையிடப்படுகிறது. ரஷியாவின் உக்ளிக் நகரில் அடுத்த மாதம் (நவம்பர் ) நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப் படுகிறது.

நான்கு நாட்கள் நடை பெறும் இத்திரைப்பட விழாவை ரஷிய அரசும் இந்திய-சோவியத் வர்த்தக சபையும் இணைந்து நடத்துகின்றன. இதே திரைப்பட விழாவில் கோ, சிவாஜி, சந்திரமுகி, தென்மேற்கு பருவக்காற்று, பாஸ் என்கிற பாஸ்கரன், அங்காடிதெரு போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன. சிவாஜி கணேசனுக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படமும் ஒன்று.

இப்படத்தில் சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதஸ்வர கலைஞராக வருவார். பரதநாட்டியக் கலைஞர் மோகனாம்பாளாக பத்மினி நடித்திருப்பார். இவர்களுடன் பழம்பெரும் நடிகர்களான பாலையா, நாகேஷ், எம்.என்.நம்பியார், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் 27-ந்தேதி ஆங்கில சப் டைட்டிலுடன் சிவாஜியின் கர்ணன் ரிலீஸ்
» தில்லானா மோகனாம்பாள்… காணக்கிடைக்காத ஷுட்டிங் ஸ்பாட் (வீடியோ இணைப்பு)
» ‘சிவாஜியின் பேரன்’ சிவாஜி தேவ் – மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்!
» சிவாஜியின் ‘கர்ணன்’ வசூல் சாதனையடுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ 3டி-யில் தயாராகிறது
» மீண்டும் வெளியாகிறது சிவாஜியின் 'கர்ணன்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum