வேலூர் மாவட்டம் – திரை விமர்சனம்
Page 1 of 1
வேலூர் மாவட்டம் – திரை விமர்சனம்
வழக்கமாய் ‘காக்க காக்க’ முதல் சமீபத்தில் பார்த்த எல்லா போலீஸ் கதைகளைப் போல.. இதிலும் ஹீரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. ஒரு குக்கிராமத்தில் விவசாயக்கூலியின்(ஜி.எம்.குமார்) மகன் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஐ.பி.எஸ் ஆகிறார். இதற்கு நடுவில் காதல், கல்யாணம் எல்லாம் முடிந்து வேலூர் மாவட்ட ஏ.எஸ்.பியாய் பதவியேற்கிறார். எல்லா தமிழ் பட போலீஸ் ஹீரோ போல் இவர் செல் நம்பரை விளம்பரப்படுத்தி ஊருக்கே ராஜாவாகிறார். வழக்கம் போல அரசியல்வாதி வில்லன் அல்லக்கை, அரசியல்வாதி மந்திரி என்று வில்லன் கும்பல். இவர்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை.
‘காக்க காக்க’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் பார்த்ததைப் போல, அதே காக்கி கலர் கதைதான். எப்போதே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இதனால் பார்த்து பழகிவிட்ட கதைதானே என்று சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. கஞ்சி போட்ட காக்கிசட்டை போல் விறைப்பாகவும், சிடுசிடுவெனவும் வருகிறார் நந்தா. காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி அதிகம் பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு.
கதாநாயகியாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண ஏதுமில்லை. பார்க்கிறார், அழுகிறார், ரெண்டு டூயட் பாடுகிறார். அவ்வளவே. அமைச்சராக ஒரு புது வில்லன் பார்க்க ஓகேவாக இருக்கிறார். அழகம் பெருமாள் மந்திரியின் முக்கிய அல்லக்கை கேரக்டர். இவர் குரலில் இருக்கும் நடிப்பு பாடிலேங்குவேஜில் இல்லாதது வருத்தமே. படத்தை ஆங்காங்கே கலகலக்க வைப்பது சந்தானம் மட்டுமே.
நந்தாவின் தந்தையாக ஜி.எம்.குமார். எல்லா பாத்திரங்களும் இருந்தாலும் திரைக்கதையிலும், டுவிஸ்டிலும் புதுமை எல்லை. எல்லாம் பார்த்து பார்த்து சலித்து விட்ட சமாச்சாரங்கள். சுந்தர் சி.பாபுவின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. ஒளிப்பதிவு பற்றியும் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். இதற்கு முன்பு மாசிலாமணி படத்தை இயக்கியவர். வழக்கமான மசாலா கதைதான் அதில் முடிந்த வரை சுவாரஸ்யத்தை தர முயற்சித்திருக்கிறார்.
படத்தில் முக்கியமான விஷயம் வேண்டாத இடத்தில் காதல் பாட்டுக்கள் போடாமல் சட்டு புட்டென காதல் காட்சிகளை முடித்தது. ஆங்காங்கே சிறு சிறு டயலாக்குகள் மூலம் காதலை, அன்பை சொன்னவிதம். எதிராளிகளை சமாளிக்கும் ஐடியாக்கள் எல்லாம் படு பழசு. பஸ்ஸில் ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு ஒண்ணுமில்லை வெறும் அஜீரணம்தான் என்று ஒரு ஆர்டினரி மாத்திரையை கொடுத்து விட்டு ஆஸ்பிட்டலில் சேர்ப்பது எல்லாம் அரத பழசு. மசாலாவிற்காக சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம் படத்தின் தரத்தைக் குறைக்கின்றது.
மொத்தத்தில் தற்போது வரும் போலீஸ் டைப் படங்களின் கதை போலத்தான் இந்தப் படமும் இருக்கிறது. அரைச்ச மாவையே எத்தனை நாளைக்குத்தான் அரைப்பார்கள் என்று ரசிகர்கள் புலம்புவது இயக்குநருக்கு கேட்குமா…?
வேலூர் மாவட்டம் – சிறை!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூர்ணா – நந்தாவின் ‘வேலூர் மாவட்டம்’!
» நந்தா நடிக்கும் ‘வேலூர் மாவட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
» ‘வேலூர் மாவட்டம்’ நந்தாவுக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லா இருக்கும்! – ஆர்.என்.ஆர்.மனோகர்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum