ஓட்ஸ் பாயசம்
Page 1 of 1
ஓட்ஸ் பாயசம்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1/2 கப்
பால் – 4 கப்
சர்க்கரை – 1½
கோவா – 2 ஸ்பூன்
பாதாம் – 5
முந்திரி – 5
நெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
பாலை ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். பாலுடன் ஓட்ஸை சேர்த்து நன்கு வேக விடவேண்டும். அதில் கோவா, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும். பாதாமை வென்னீரில் சிறிது நேரம் ஊறவைத்து தோல் நீக்க வேண்டும். பாதாம், முந்திரி ஆகியவற்றை மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்து அதனுடன் சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான ஓட்ஸ் பாயசம் தயார்
மருத்துவக் குணங்கள்:
ஓட்ஸில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸில் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது.
சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது.
இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸில் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்ம நிலை கரையக்கூடிய நார்பொருள் (பீடா குளுகான்) உள்ளது.
இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப் பொருளை உறிஞ்சி வெளியேற்று கிறது.
இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது.
அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்பந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவுகிறது.
ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது
ஓட்ஸில் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை குறைக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum