தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

Go down

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்  Empty பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

Post  amma Fri Jan 11, 2013 2:21 pm

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

3கருத்துகள்


பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்  Tamil-Daily-News-Paper_6320917607
13:48:11

Tuesday

2012-04-17









What are Dietary Supplements


You need to upgrade your Adobe Flash Player to watch this video.

Get Adobe Flash player


பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்  Vtpixpc
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்  Morevideo_ventunoMORE VIDEOSஎன்
கணவர் கல்லூரி ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிகிறார். எனது பெயரில் நிலம்
வாங்கியிருக்கிறோம். அதில் வீடு கட்ட வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு.
எப்போது நிறைவேறும்?
- கே.ராஜம், திருச்சி.

திருமுருகனின் அருள்
நிச்சயம் உங்கள் கணவருக்கு உள்ளது. ராகுவின் பலமான ஆதிக்கத்தில் பிறந்த
உங்களுக்கு பெரும் செல்வம் அமையும் யோகம் இருக்கிறது. நாகராஜா பூஜை
செய்தால் விரைவில் வீடு கட்டி முடிப்பீர்கள். உங்களுக்கு நல்ல வேலையும்
கிடைக்கும். பாம்புடன் கூடிய திருமுருகன் படம் அல்லது வெள்ளியில் நாகர்
விக்ரகம் வாங்கி அதை அலங்கரித்து உங்களின் ஜென்ம நட்சத்திர நாள் அல்லது
செவ்வாய்க் கிழமை தோறும் சிறப்பாக பூஜை நடத்துங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை
22 முறை சொல்லுங்கள்.

கந்தர்ப்ப கோடி லாவண்ய நிதயே காமதாயினே
குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்
பார் பணியும் பரஞ்சுடர் கண்ணுதித்த திருவே
கார்த்திகைச் சுடரே
உந்தனது அடி நான் உள்ளன்பு கொண்டு கைகுவித்து வணங்குகின்றேன்
என் நிலத்தை காக்க வேண்டும்
ஓம் சரவணபவ சரணம்.
என்
மகன் பலமுறை பலபேருடன் கூட்டுத் தொழில் தொடங்கி நஷ்டமடைந்தான். ரொம்பவும்
கஷ்டப்படுகிறான். வயதுக்கு வந்த குழந்தைகள் உள்ளன. என்ன செய்வது?
- கே.எஸ்.திருவேங்கடம், நாமக்கல்.

உங்கள்
மகனுக்கு அலங்காரப் பொருட்கள் வியாபாரம் (பேன்ஸி ஸ்டோர்), மெடிக்கல்
ஸ்டோர், மருத்துவமனை சார்ந்த உபகரணங்கள் போன்ற வியாபாரங்கள் மட்டுமே அதிக
லாபமளிக்கும். உங்கள் மகன் கருணையும் பச்சாதாபமும் கொண்டவர். ஊர் ஊராக
சுற்றுவதில் அதிக ஆவல் உள்ளவர். வலக்கை மோதிர விரலில் புஷ்பராகம் பதித்த
மோதிரத்தை அணிந்து கொள்ளச் சொல்லுங்கள். வெள்ளிக்கிழமைகளில் புதிய
முயற்சிகள் கூடவே கூடாது. உங்களுக்கு 74 வயதாகிறது என்று
சொல்லியிருக்கிறீர்கள். இந்த வயதில் குடும்பத்தை பற்றிய கவலைகளை குறைத்துக்
கொள்ள வேண்டும். கவலையைப் பிரார்த்தனையாக மாற்றிக் கொள்ளுங்கள். இலையும்
சருகுகளும் மண்ணுக்குள் மக்கிப்போய் நாளடைவில் உரமாவதுபோல தனிமையில்
இருந்து இறைவனின் துதியைப் பாடுங்கள். நீங்களும் மகனும் சிவபுராணத்தை
காலையிலும் மாலையிலும் படியுங்கள். தொடர்ந்து பிரதோஷத்திற்கு சென்று ஈசனை
தரிசியுங்கள். நான் திரைப்பட மெல்லிசைக் குழுவை நடத்திக் கொண்டே ரியல்
எஸ்டேட் தொழிலையும் செய்து வருகிறேன். மிகவும் சிரமப்படுகிறேன். தொடர்ந்து
நடத்தலாமா? அல்லது வேறு ஏதேனும் தொழில் செய்யலாமா?
- எம்.ராஜசேகரன், சென்னை-14.

தேவையற்ற,
ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். தேவ குருவும் அசுர குருவான
சுக்கிரனும் உங்களின் வாழ்வை நடத்துவதால் தொழிலில் ஏற்ற இறக்கங்கள்
நிச்சயம் உண்டு. திட்டமில்லாமல் வாழ்வை நடத்த வேண்டாம். உங்களுக்கு சினிமா,
நடிப்பு என்று கலைத்துறைதான் சிறந்தது. இந்த வருடமே உங்களுக்கு வருமானம்
நன்றாக இருக்கும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் படத்தை உங்கள் அலுவலகத்தில் வைத்து
படத்தை நன்கு அலங்கரித்து வெள்ளைத் தாமரை சாற்றி பூஜியுங்கள். ரியல்
எஸ்டேட் விஷயமாக உங்களை அணுகுபவரிடம் சென்ட் பாட்டிலை பரிசாகக் கொடுங்கள்.
எப்போதுமே சுக்கிர ஹோரையில் புது முயற்சியை மேற்கொண்டால் வளமாவீர்கள்.
அபயக் குரலுக்கு, ‘‘ அஞ்சேல்’’ என்று அருகில் வருபவள் அம்பாள்தான். எனவே
கீழேயுள்ள துதியை தினமும் எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை பாடுங்கள்.
கருணைத் தெய்வமே கற்பகமே! காணவேண்டும்
உந்தன் பொற்பதமே! உறுதுணையாக என்
உள்ளத்தில் அமர்ந்தாய் உனையன்றி வேறு
யாரோ என்தாய்!
ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்
அன்னையே என்மேல் இரங்கிட வேண்டும்
நாளும் உன்னை தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும்
ஓம்சக்தி! ஓம்சக்தி! ஓம்சக்தி!
எங்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னும் சொந்த வீடு அமையவில்லை. பரிகாரம் கூறுங்கள்.
- உஷா மனோகரன், பெங்களூரு.
நேர்மையுடனும்
தீவிர முயற்சியுடனும் வாழ்பவர் நீங்கள். கறுப்புநிற துணியை அதிகம்
உடுத்தாதீர்கள். உங்களுக்கு செவ்வாய் பலம் குறைவாக இருப்பதால் திருமுருகன்
படத்தை அலங்கரித்து வழிபாடு செய்யுங்கள். குங்கிலியத்தாலோ அல்லது
சாம்பிராணியாலோ நிறைய தூபம் போடுங்கள். கீழேயுள்ள ஆறு திருநாமங்களை தினமும்
கூறி நமஸ்கரியுங்கள்.
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருகா போற்றி போற்றி
தூய அம்பல லீலா
போற்றி போற்றி
துருத பதங்க இரத ப்ரசண்டா போற்றி போற்றி
செப்புங்கவ சங்கர பாலகா போற்றி போற்றி
செகம் அளப்ப சிந்தாகு உலவு அரி மருக போற்றி போற்றி
ஷடாக்ஷர, ஷடானன, போற்றி போற்றி
எனது தந்தை இறந்து நான்கு வருடமாகிறது. இதுவரை திதி கொடுக்கவில்லை. நின்று போன இந்த விஷயத்தை மறுபடியும் எப்படி தொடரலாம்?
- கே.வேல்மயில், அரசம்பட்டி.

மறைந்தவர்களுக்கு
நீத்தார் கடனை சரிவர செய்யாமல் இருப்பதுதான் பல குடும்பங்களின் நீங்காத
துயருக்கு முக்கிய காரணமாகும். இப்படி பல குடும்பங்கள் பெருகி விட்டதை சில
ஆண்டுகளாக பார்க்கப் பரிதாபமாக உள்ளது. இந்த தவறு ஒன்றுதான் குடும்பத்தை
வாழவிடாமல் வாசலில் கோலமிட முடியாத வீடாக ஆக்கிடும் என்று பல சாஸ்திர
நூல்கள் எச்சரிக்கின்றன. கடுமையான பரிகாரம் செய்ய வேண்டும்.
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயத்தில்
அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடத்துங்கள். மேலும் அங்குள்ள
திருக்குளத்தில் பத்து கிலோ எள்ளை கீழேயுள்ள வடமொழி ஸ்லோகத்தைச் சொல்லிச்
சொல்லி மீன்களுக்கு போடுங்கள். அதற்குப் பிறகு வரும் வருடாந்திர திதியை
தவறாது செய்து கொண்டே
வாருங்கள்.

குக்ஷேத்திரம் கயா கங்கா ப்ரபாஸம்
புஷ்கராணிச தீர்த்தாநி எதாநி
புண்யாநி திலதானே பவந்து இஹ
அஸ்மத்குலே ம்ருதாயேச கதிர்யேஷாம்
நவித்யதே தேஸர்வே த்ருப்திம் ஆயாந்து
மத் தத்தேன தில முஷ்டினா!
நான்
பேரன் பேத்திகள் எடுத்து விட்டேன். இன்னும் என் கணவர் இப்போதும் திட்டிக்
கொண்டிருக்கிறார். எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறார். செத்து
விடலாம் போலுள்ளது. என்ன செய்வது?
- வி.குமுதவல்லி, திருச்சி.

கவலைப்படாதீர்கள்.
ஊருக்காகவாவது வாழ்ந்துதான் ஆகவேண்டும். அவர் சொல்வதை இந்தக் காதில்
வாங்கி அந்த காதில் விட்டுவிடுங்கள். யானை தன் தலையில் தானே மண்ணை வாரி
போட்டுக் கொள்வதுபோல செய்கிறார், அவ்வளவுதான். நீங்கள் இந்தப் பிறவி என்கிற
பெருங்கடலை எப்படிக் கடப்பது என்று மட்டும் யோசியுங்கள். இறைவனின்
திருநாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருங்கள். உங்களுக்கு அருகாமையிலுள்ள
சமயபுரம் மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி, அன்னம் படைத்து தொடர்ந்து மூன்று
ஞாயிற்றுக்கிழமைகள் வழிபாடு செய்யுங்கள். கீழேயுள்ள பாடலை தினமும் 11 முறை
பாடுங்கள்.
வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல்
இல்லாமை யாலுழல் புல்லேன் செய் குற்றங்கள்
ஏது கண்டாய், மல்லார் வயல் ஒற்றி நல்லாய்
அக்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
ஆசிரியர்
பயிற்சி முடித்து பல ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு அரசாங்க வேலை
கிட்டவில்லை. மேலும் வீட்டில் அனைவரும் என்னை வெறுக்கின்றனர். வேலை
கிடைத்தால்தான் இதற்கு ஒரு தீர்வு கிட்டும்போல் தெரிகிறது. பரிகாரம்
கூறுங்கள்.
- எஸ்.மாலதி காஞ்சிபுரம்.

சூரியனின் ஆதிக்கத்தில்
பிறந்ததால் அரசாங்க வேலைக்கான தகுதியோடு படித்து விட்டீர்கள். வைகாசியில்
பிறந்ததால் சூரியனின் சக்தி கொஞ்சம் குறைந்துள்ளது. வீட்டிலுள்ளோர்
வெறுப்பதாகக் கூறுகிறீர்கள். ஒன்றை நினைவில் வையுங்கள்.
இன்னொருவரிடமிருந்து அன்பை எதிர்பார்ப்பதைவிட நாம் பலமடங்கு எந்த
எதிர்பார்ப்புமின்றி அன்பு செலுத்தினால் அதுவே மனநிம்மதியை தந்துவிடும்.
அன்பும் அக்கறையும் உங்களிடமிருந்துதான் முதலில் வெளிப்பட வேண்டும்.
நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் அன்பாக இருந்தால் இறைவனின் அருள்
உங்களுக்குள் வெளிப்படுவதை உணர்வீர்கள்.
காஞ்சிபுரம்-வேலூர்
நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் உள்ள சுந்தரவரதர் ஆலயத்திற்கு சென்று
வாருங்கள். இங்கு உடல் முழுவதும் நாகங்கள் சுற்றப்பட்டு இடக்காலை மடித்து
ஊன்றிய நிலையில் கருட பகவான் அருள்கிறார். வளர்பிறை பஞ்சமியன்று அங்கு
சென்று, கருட பகவானுக்கு தேன் அபிஷேகம் செய்து, தயிர்சாதம் நிவேதனம்
செய்யுங்கள். இந்த பரிகார வழிபாடு, நிரந்தர வேலை கிட்டச் செய்யும். மேலும்
அந்த ஆலயத்தில் அமர்ந்து கீழேயுள்ள ஸ்லோகத்தை 108 முறை சொல்லுங்கள்.
பட்சிராஜ: ஸ்வஸ்தி தார்க்ஷிய: அரிஷ்டநேமி ப்ரததாது மஹ்யம்
நான்
காதல் திருமணம் செய்து கொண்டேன். மூன்று குழந்தைகள் உள்ளனர். எனது தாய்,
தந்தை எங்கு பார்த்தாலும் கண்டும் காணாததுபோல செல்கின்றனர். அவர்களோடு
மீண்டும் இணைய என்ன செய்ய வேண்டும்?
- பூர்ணிமா, கோவை.

உங்கள்
ராசியில் இப்போது ராகுவும் 7ல் கேதுவும் உள்ளதால் தற்சமயம் நாக வழிபாடு
செய்யுங்கள். சனிபகவான் நல்லது கெட்டது என்று இரண்டையும் மாறி மாறிச்
செய்வார். விரைவில் நல்ல காலம் பிறக்கும். அவர்கள் மனமும் மாறி உங்களை
ஏற்றுக் கொள்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன்-சொக்கநாதர் படத்தை வைத்து
பூஜியுங்கள். தொடர்ந்து 12 நாட்கள் தினமும் 25 முறை கீழேயுள்ள பாடலை
பாடுங்கள்.
உனக்குப் பணி செய்ய உன்றனை எந்நாளும் நினைக்க
வரம் எனக்கு நீ தா
மனக்கவலை நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே
எவ்வுலகும் ஆக்குகின்ற சொக்கநாதா
ஓம் சிவகடாட்சம் பரிபூர்ணம்
ஓம் சிவகடாட்சம் பரிபூர்ணம்
ஓம் சிவகடாட்சம் பரிபூர்ணம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum