பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
Page 1 of 1
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
என் மகன் விபத்தில் இறந்து விட்டான். முதலாம் ஆண்டு திதியை ஒரு வருடம் நிறைவு பெறுவதற்குள் செய்ய வேண்டுமென்று ஜோதிடர் கூறுகிறார். எப்போது கொடுப்பது?
- அன்பழகன், மலையனூர். எந்த தமிழ் மாதத்தில் எந்த திதியன்று இறந்தார் என்று பார்த்து, அன்றே முதல் வருடத்திய திதியை கொடுக்க வேண்டும். இப்படி 36 வயதில் ஒருவர் இறப்பதை அகால மரணம் என்பார்கள். இது குடும்பத்தில் அனைவரையும் பாதிக்கலாம் என்பதால் கொஞ்சம் பெரிய பரிகாரமாக செய்து விடுங்கள். அதுதான் நல்லது. உங்கள் மகனின் உயிர் பிரிந்த திதியன்று அதாவது ஒவ்வொரு தமிழ் மாதமும் அந்தக் குறிப்பிட்ட திதியன்று எள்ளு சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் மூன்றையும் சிவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு நிறைய கொடுங்கள். அப்படி விநியோகம் செய்யும்போது ‘ஸர்வேசா துர்ம்ருதி தோஷம் நிவாரய நிவாரய’ என்று சொல்லியபடியே கொடுங்கள்.
என் மகள் திருமணம் 2010ல் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். விவாகரத்து வேண்டுமென்று மாப்பிள்ளை வீட்டார் பிடிவாதம் பிடிக்கின்றனர். என்ன செய்வதென்றே புரியவில்லை. வழி கூறுங்கள். - பி.சுதாகரன், சேலம்.
ஜாதகத்தில் 7, 8ல் ராகு-கேது தோஷமுள்ள ஆண் ஜாதகத்திற்கு, தோஷமில்லாத பெண்ணை திருமணம் செய்யக் கூடாது. அதனால்தான், பல கஷ்டங்களை அனுபவிக்கும்படி நேர்ந்துவிட்டது. அதனாலென்ன, கவலைப்படாதீர்கள். கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு, மகளோடு மாப்பிள்ளையை சேர்த்து வைக்கப் பாருங்கள். கணவன், மனைவியை பிரிப்பது மகா பாவத்தில் ஒன்றாகும். எல்லாவற்றிற்குமே தீர்வு உண்டு. ஏதேனும், ஒரு சில விஷயங்கள் நாம் எதிர்பார்ப்பதுபோல அமையாமல் இருக்கலாம். அல்லது தீர்வு கிடைக்காமல் போகலாம். கணவனும் மனைவியும் மட்டும்தான் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவுக்கு வரவேண்டும். கீழேயுள்ள பாடலை தினசரி ஒன்பது தடவை துர்க்கை சந்நதியில் பாடுங்கள்.
எரிஆர் சடையும் மடியும் இருவர்
தெரியாதது ஓர்
தீத்திரள் ஆயவனே! - மரியார் பிரியா மருகல்பெருமான் அரியான் இவளை அயர்வு ஆக்கினையே.
எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேனளித்து ஊறிய இப்பால் ஆய் வனையும் ஆள உரியானை வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவி நின்றார் வினை விடுமே!
எங்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தைப் பேறு கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்வது? செல்வச் செழிப்பு பெறவும் வீடு கட்டவும் பரிகாரம்
கூறுங்கள்.
- ஆறுமுகம், தூத்துக்குடி.
புத்திரப் பேறுக்காக திருவெண்காட்டிற்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள உலகளந்த பெருமாள் கோயிலுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்துங்கள். கோயிலுக்குள் இருக்கும் ஏதேனும் மரத்தில் சிறு மரத் தொட்டில் கட்டி விடுங்கள். ஆயுள் முழுவதும் செல்வச் செழிப்பு நிச்சயம் உண்டு. 2012 பிப்ரவரிக்கு மேல் கடன் கிடைத்து வீடு கட்டுவீர்கள். கீழேயுள்ள பதிகத்தை சனிக்கிழமை சிவாலயத்தில் அமர்ந்து 66 தடவை பாடுங்கள்.
விடம் உண்ட மிடற்று அண்ண வெண்காட்டின் தன் புறவன் மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குடுகு என்று தடம் மண்டு துறைக் கொண்டை தாமரையின் பூ மறையக்
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
கடந்த பத்து வருடங்களாக கடுமையான சோதனைகளைக் கடந்து வந்துள்ளேன். எனக்கு மறுமணம் ஆகுமா? குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- அருள்மொழி தேவி, ஈச்சனாரி, கோவை.
உங்கள் ஜாதகத்தில் குரு, புதன் இருவரும் பலமாக இருப்பதால் வசீகர முகத்தையும் பெயரையும் புகழையும் அவர்கள் அளிப்பார்கள். தர்ம சிந்தனையும் இரக்க சுபாவமும் நிரம்பப் பெற்றவர்கள் நீங்கள். படிப்புக்கு தகுந்த வேலை தாமதமாகத்தான் கிடைக்கும். பகைவரின் சூழ்ச்சி பலிக்காது. சூரிய-சந்திர சேர்க்கையில் பெயரை மாற்றிக் கொண்டது நல்லதே ஆகும். சனி பகவான் 5ம் வீட்டில் அமரும்போது வாழ்க்கைத் துணையை அடைவீர்கள். அதாவது 2012 செப்டம்பருக்கு மேல் நடக்கும். மேலும் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை தலத்தில் அருளும் குரு பகவானை தரிசித்து வாருங்கள். இந்த ஆலயத்தில் தயிர்சாதத்தை நிவேதனம் செய்யுங்கள். கீழேயுள்ள நக்கீரர் பாடலை 21 முறை பாடுங்கள்.
குன்றம் எரிந்தாய் குரை கடலில் சூர் தடிந்தாய் புன்தலைய பூதப் பொருபடையாய்-என்றும்
இளயாய் அழகியாய் ஏறூர்ந்தான் - ஏறே உளையாய் என் உள்ளத்து உறை. ஸச்சிதானந்த குரு ஸச்சிதானந்தா ஸத்குரு ஜயகுரு ஸச்சிதானந்த குரு. என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான். மேற்கொண்டு எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கலாம்?
- ராஜேஷ்வரி, அயப்பாக்கம்.
தற்போது சனிபகவான் 10ம் வீட்டில் இருப்பதால் படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பான். வக்கிரம் காரணமாக 9ம் வீட்டிற்கு சனி வரப்போகிறார். தன்னம்பிக்கை அதிகமுள்ள இவர் பெரிய பொறுப்புகளை நிர்வகிப்பார். வங்கி, நிர்வாகம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு. இவருக்கு திருமணம் செய்யும்போது பெண், 6, 15, 24 தேதியில் பிறந்தவளாக இல்லாமலும், அதே நாட்களில் திருமணம் இடம்பெறாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். வேதம் படிக்கும் குழந்தைகளுக்கு சதய நட்சத்திர தினத்தன்றோ அல்லது வியாழக்கிழமையோ ஒருமுறை அன்னதானம் செய்யுங்கள். சீதாராம குருகுலம் வேதபாடசாலை (தொலைபேசி எண்: 9381061946) குழந்தைகளுக்கு இவ்வாறு அன்னதானம் செய்யலாம். உங்கள் மகனுக்கு குருவின் அனுக்கிரகம் நிச்சயம் வேண்டும். எனவே கீழேயுள்ள ஸ்லோகத்தை தினமும் 19 முறை உங்கள் மகனை சொல்லச் சொல்லுங்கள்.
உபாஸக மன: ப்ரஜ்நா
ஸ்பூர்த்தயே புண்ய மூர்த்தயே
காருண்ய மூர்த்தயே ஸ்ரீமத்
தக்ஷிணாமூர்த்தயே நம
நதோஸ்மி குரு பக்த்யாஹம்
ஸம்ப்ரதாய குரூத்தமம்
அத்வைத ஸ்தாபனாசார்யம்
சங்கராச்சார்யம் அன்வஹம்
எனக்கு 50 வயதாகிறது. வீட்டில் என் மனைவி எப்போதும் சண்டை சச்சரவு என்றிருக்கிறாள். தினமும் ஏதேனும் பிரச்னை வருகிறது. நிம்மதியாக இருக்க வழி கூறுங்கள்.
- கே.தேவராஜன், ஓசூர்.
உங்கள் மனைவி ஜாதகத்துடன் உங்கள் ஜாதகத்தையும் சேர்த்து ஜோதிடரிடம் காட்டுங்கள். கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் வாலிப வயதில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தீர்கள். சூரியன் உங்களை வழி நடத்தி வந்துள்ளார். அதனால் ஏதோ வாழ்க்கை நகர்ந்தது. தற்சமயம் சனிபகவானும் 3ல் வந்துள்ளதால் இப்படி பிரச்னை உருவாகின்றன. சனிக் கிழமைகளில் சிவாலயம் சென்று சனி பகவானுக்கு எட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். கீழேயுள்ள திருவாசக பாடலை நிறைய முறை பாடுங்கள்.
முதலைச் செவ்வாய்சியர் வேட்கை வென்னீரில் கடிப்ப மூழ்கி
விதலைச்சாசியவேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலைச் செய் பூண் முலை மங்கை பங்கா என் சிவ கதியே
எங்கள் மாப்பிள்ளை குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். பேரன், மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. என்ன செய்வது?
- அன்னபூரணி மெய்யப்பன், ராமாபுரம், சென்னை.
உங்கள் மாப்பிள்ளை சனி தசையுடன் ஏழரைச் சனியும் சேர்ந்த அமைப்பில் பிறந்துள்ளார். சனியின் பலம் முழுதும் குறைந்ததால் இந்த கஷ்டம் வந்துள்ளது. அதனால், இது சமயம் நோயாளி வைத்தியரை நாடிச் செல்வதுபோல நாம்தான் இறைவனை நாடிச் செல்ல வேண்டும். சென்னைக்கு அடுத்த அரக்கோணத்திற்கு அருகேயுள்ள சோளிங்கர் எனும் நரசிம்மர் தலத்திற்கு உங்கள் மாப்பிள்ளையை அழைத்துச் செல்லுங்கள். மேலும் அங்கேயே உள்ள அனுமனையும் தரிசியுங்கள். தினமும் ஒன்பது தடவை கீழேயுள்ள பாடலை பாடுங்கள்.
சிம்மமாய் அன்று சினந்து எழுந்தாய்.
உன்னைச்
சேவித்து அருள் பெறுவோம். சோளிங்க
மலைஏறி
எம்மை காக்கும் தெய்வம் நீ எக்குறையும்
நீக்கிடுவாய்
அன்னை அன்பாய் இனிக்கும் அக்காரக்
கனியானாய்
அஞ்சனை மைந்தனில் உன் அருளெல்லாம்
எதிரொலிக்க
அமர்ந்திருக்கின்றாய் நீ யோக நிலையில்
மலை மேல் - நெஞ்சில் உந்தன் ஞாபகங்கள்
ஞான ஒளி தீபங்களே தஞ்சம் என்றால்
போதும் சகலமும் எமக்கருள்வாய்.
எனக்கு நல்ல வரனாக எப்போது வரும்? இப்போதே 31 வயதாகிறது. வழி சொல்லுங்கள்.
- வி.கோகிலவாணி கள்ளக்குறிச்சி.
ஆர்ப்பாட்டம் செய்யாமல் அடக்கமாக காரியம் நிறைவேற்றுவீர்கள். 2012க்கு பிற்பகுதியில் யோகம் வருகிறது. புனர்பூச நட்சத்திரத்திற்கு பொருத்தமாக பெயரை வைத்துள்ளீர்கள். புதன், செவ்வாய் இணைப்பால் நரம்பு பலம் குறைந்து காணப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மனை சென்று தரிசியுங்கள். கீழேயுள்ள பதிகத்தை 21 முறை தினமும் புதன் ஹோரையில் பாடுங்கள்.
நரியை பரியாக்கி, ஞால மெல்லாம் நிகழ்வித்து
பெரியதென்னன் மதுரை யெலாம்
பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே
அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்ஜோதி நீ
செய்வதென்றும் அறியேனே!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
» பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
» சர்ப்ப தோஷ பரிகாரங்கள்
» ஜோதிட பரிகாரங்கள்
» பரிகாரங்கள்
» பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
» சர்ப்ப தோஷ பரிகாரங்கள்
» ஜோதிட பரிகாரங்கள்
» பரிகாரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum