தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எடிட்டர் ஆண்டனியின் வெற்றி ரகசியம்!

Go down

எடிட்டர் ஆண்டனியின் வெற்றி ரகசியம்! Empty எடிட்டர் ஆண்டனியின் வெற்றி ரகசியம்!

Post  ishwarya Thu Apr 11, 2013 6:11 pm

சிறுவயதிலேயே இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கியே வாழ்க்கையை நகர்த்தி வெற்றியடைவது பெரும்பாலோரின் வெற்றிக் கதை. ஆனால் எந்த இலக்கும் இல்லாமல் துவங்கி திடீரென்று கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து உயரலாம் என்கிறார் எடிட்டர் ஆண்டனி. ‘காக்க காக்க’வில் துவங்கி தற்போதைய ’7ஆம் அறிவு’ உட்பட தமிழின் முக்கிய படங்களின் எடிட்டர் இவர்.

“நாங்க ஆங்கிலோ இண்டியன் குடும்பம். அப்பா ரூடால்ப். ரெயில்வே ஊழியர். அம்மா மோரின் ஹவுஸ் வொய்ப். மனைவி பெயர் சபீனா. ஒரே ஒரு குழந்தை…பெயர் ஜோயி. நான் பிறந்தது விழுப்புரம், வளர்ந்தது பெரம்பூர். ரெயில்வே ஸ்கூல்ல முதல் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சேன். எம்.சி.சி. காலேஜ்ல இங்கிலீஷ் படிச்சேன். என்ன பண்றதுன்னு தெரியாம ஆங்கிலத்தை ச்சும்மா எடுத்து படிச்சேன். ரெயில்வே ஆளுங்களோட பசங்க அப்படியே ரெயில்வே வேலையில் செட் ஆயிருவாங்க.

எனக்கு வாழ்க்கைல எந்த லட்சியமும் கிடையாது. சும்மா சுத்திக்கிட்டு இருந்தேன். எனக்கு இருந்த ஒரே ஆர்வம் படம் வரையறது. அப்போ என் ஃப்ரெண்ட் ஒருத்தன் படம் வரைய தெரிஞ்சவங்க, கம்ப்யூட்டர்ல அனிமேஷன் பண்ணலாம்னு சொன்னான். எனக்கு அது சுவாரஸ்யமா பட உடனே ஒரு இன்ஸ்டிட்டியூட்ல சேர்ந்தேன். இந்த சமயத்துல காலேஜ் முடிச்சிருந்தேன். அனிமேஷன் கிளாஸ் சாயந்திரம்தான். அதனால காலைல கொரியர் பையனா ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன். காலையில வேலை. சாயந்திரம் படிப்பு. எனக்கு இந்த அனிமேஷன் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

இந்தச் சமயத்துல இன்னொரு வாய்ப்பு வந்தது. என் நண்பர் ஒருவர் எடிட்டிங் துறைல இருந்தார். அவர் “நீ அனிமேஷன் படிக்கும்போது கூடவே எடிட்டிங் கத்துக்க. சும்மா வந்து பாரேன்”னு அழைச்சார். அங்க ஒருத்தங்ககூட மூணுநாள் உக்காந்து எடிட்டிங் பண்றதை பார்த்தேன். ஏனோ தெரியல என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு எடிட்டிங்கை விட மனசில்ல. அங்கிருந்து கிளம்பி ‘எடிட் பாயிண்ட்’ என்ற எடிட்டிங் நிறுவனத்தை நடத்தி வந்த அருண்மூர்த்தியிடம் வாய்ப்பு கேட்டேன். “சார் எனக்கு சம்பளம் எதுவும் வேணாம்… தொழில் கற்றுக் கொடுங்க… எடிட்டிங் பத்தி கத்துக்க ஆசைப்படறேன்..”னு அவரிடம் சொன்னேன்.

அங்க வேலை கிடைச்சது. எடிட்டிங் கத்துக்கணும்குற வெறியில இருபத்து நாலு மணி நேரமும் அங்கே தொடர்ச்சியாக வேலை பார்த்தேன். தினமும் ரெண்டு மணி நேரம்தான் தூங்கினேன். ஏவிட் மிஷினில் நானே உட்கார்ந்து ஒவ்வொரு பட்டனாக அமுக்கிப் பார்த்து.. ‘ஓஹோ.. இதை இப்படிச் செய்தால் இப்படி ஆகுமோ’ன்னு தன்னிச்சையாக ஏவிட் மிஷினை மேய்ந்தேன். என்னோட சுய பயிற்சியில் ஸ்பீடு ரொம்ப அதிகமாச்சு. நிறைய கத்துக்கிட்டேன். என்னோட வேலையைப் பார்த்துட்டு சம்பளத்தோடு அங்க வேலைக்கு சேரச் சொன்னார் அருண்மூர்த்தி. நிறைய விளம்பரப் படங்கள், டாகுமெண்ட்ரி படம் பண்ணேன். இந்த சமயத்துல ராஜீவ்மேனன் மூலமா கௌதம்மேனன் அறிமுகம் கிடைச்சது. இதற்கிடையில இயக்குநர் மனோபாலா படங்களுக்கு எடிட்டிங்ல உதவி பண்ணேன்.

ஒரு நாள் கௌதம்மேனன் என்னிடம் அவசரமாக வந்து ஆடியோ ரிலீசுக்கு நேரமாச்சு ‘காக்க..காக்க’ படத்தில் வரும் ‘என்னை கொஞ்சம் மாற்றி’ பாடலை எடிட் செய்து தரும்படி கேட்டார். நானும் அதைச் செய்து கொடுத்தேன். அந்தப் பாடலில் இம்ப்ரெஸ் ஆயிட்டு ‘முழு படத்தையும் நீயே எடிட் செய்து கொடுத்துடேன்’னு கௌதம் சொன்னார். ஸோ… ‘காக்க… காக்க’ படம்தான் நான் எடிட்டிங் செய்த முதல் முழு படம்ன்னு சொல்லலாம். ‘காக்க காக்க’ ஆரம்பிச்சு இதுவரை அறுபது படங்கள் வரை பண்ணியாச்சு.

சிரமம், அவமானம்ன்னு பார்த்தால் எனக்கு அப்படியேதும் அனுபவபூர்வமாக நடக்கவில்லை. மனசு என்ன நினைக்குது… எதை செய்தால் நாம் ஜெயிக்க முடியும்ன்னு மனசு சொல்றதை மொதல்ல கேளுங்க.. நானும் அப்படித்தான் மனசை கேட்டு நடந்தேன். அலைந்து திரிந்து நான் வாய்ப்பு தேடவில்லை. ஆனா எனக்கு கிடைத்த வாய்ப்புகளை கெட்டியா பிடிச்சேன். கிடைச்ச வாய்ப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது முக்கியமான விஷயம். இது மட்டுமில்லாம எடிட்டிங்ல நிறைய உழைச்சேன். நாள் முழுசும் எடிட்டிங் மிஷினோடுதான் இருப்பேன். இப்பவும் எனக்கு வேலைதான் முதல்ல. அப்புறம்தான் மத்தது. இதுதான் என் வெற்றி ரகசியம்” என்கிறார் ஆண்டனி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum