தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் ஆண்டனியின் நான் - சிறப்பு தகவல்கள்

Go down

விஜய் ஆண்டனியின் நான் - சிறப்பு தகவல்கள்  Empty விஜய் ஆண்டனியின் நான் - சிறப்பு தகவல்கள்

Post  ishwarya Sat Mar 09, 2013 1:08 pm


விஜய் ஆண்டனியின் நான் படத்தின் இசை வெளியீட்டு விழா எளிமையாகவும், சிறப்பாகவும் நடந்தது. போட்டிப் பொறாமை நிறைந்த இந்த உலகில் ஒரு இசையமைப்பாள‌ரின் 25வது படத்துக்கு பிற இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டது நெகிழ்ச்சியான சம்பவம்.

நான் விஜய் ஆண்டனியின் இசையமைக்கும் 25வது படம் மட்டுமல்ல, அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படமும்கூட. பொதுவாக முதல் படத்தை காதல் படமாகவோ காமெடிப் படமாகவோ சேஃப்டியாக அமைத்துக் கொள்வார்கள். விஜய் ஆண்டனி துணிச்சலாக த்‌ரில்லர் வகையை தேர்வு செய்திருக்கிறார்.

தவறு செய்வதற்கான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையாதவரை அனைவரும் நல்லவர்களே. இந்தக் கருத்துதான் படத்தின் மையம். ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று முகங்கள் உண்டு. சமூகத்துக்கு காண்பிக்கும் ஒரு முகம், குடும்பம், நண்பர்களுக்கு‌த் தெ‌ரிந்த ஒரு முகம். யாருக்குமே தெ‌ரியாத தெ‌ரியப்படுத்த விரும்பாத ரகசிய முகம். கார்த்திக் என்பவனின் இந்த மூன்றாவது முகத்தை நானில் காட்டியிருக்கிறார்கள்.

கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் விஜய் ஆண்டனி என்பதை சொல்லத் தேவையில்லை. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா படத்தை தயா‌ரித்திருக்கிறார். ‌ஜீவா சங்கர் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார்.

ரூபா மஞ்ச‌ரி, சித்தார்த், அனுயா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். மற்றவர்கள் படத்துக்கே உச்சி மண்டையில் கிர்ரடிக்கும் பாடல்கள் தரும் விஜய் ஆண்டனி தனது சொந்தப் படத்துக்காக டியூன்களை செதுக்கியிருக்கிறார்.

ஆகஸ்டில் நான் வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum