தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடு ராத்திரியிலும் தொந்தரவு பண்ணுவேன்! – சிம்பு ஒப்புதல்!!

Go down

நடு ராத்திரியிலும் தொந்தரவு பண்ணுவேன்! – சிம்பு ஒப்புதல்!! Empty நடு ராத்திரியிலும் தொந்தரவு பண்ணுவேன்! – சிம்பு ஒப்புதல்!!

Post  ishwarya Thu Apr 11, 2013 2:10 pm

எனது படத்தில் பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர்களுக்கு நடு ராத்தியிலும் போன் போட்டு தொந்தரவு செய்வேன், என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். சிலம்பரசன் – ரிச்சா ஜோடி நடித்து, டைரக்டர் தரணி இயக்கியிருக்கும் புதிய படம் ஒஸ்தி. இந்த படத்தை பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, `ஒஸ்தி, சல்மான்கான் நடித்த `தபாங் என்ற இந்தி படத்தின் தழுவல். அந்த படத்தின் உச்சக்கட்ட காட்சியில், சல்மான்கான் `6 பேக்குடன் தோன்றுவார். நான், `போடா போடீ படத்திலும் நடிக்க வேண்டியிருந்ததால், அந்த காட்சியை தவிர்த்து விடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் சில ஊடகங்களில், “ஒஸ்தி படத்தில் சிலம்பரசன் 6 பேக்குடன் நடிக்கிறார் என்று எழுதி விட்டார்கள். என் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. அவர்களை ஏமாற்ற விரும்பாததால், நான் ஒரு மாதமாக காலையில் மூன்று மணி நேரம், மாலையில் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்து, `6 பேக்குக்கு மாறினேன்.

ஒரு மாதமாக நான் பிரியாணி சாப்பிடவில்லை. தண்ணீர் கூட அளந்துதான் குடித்தேன். சிலம்பரசன் எல்லா விஷயத்திலும் தலையிடுவார். படப்பிடிப்புக்கு தாமதமாகத்தான் வருவார். அதனால் இந்த படம் முடிவதற்கு ஒன்றரை வருடம் ஆகும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், நாங்கள் இரவு – பகலாக படப்பிடிப்பு நடத்தி, 75 நாட்களில் முடித்து விட்டோம். “நான் கண்ணாடி மாதிரி. எதை காட்டுகிறாயோ, அதை திருப்பிக் காட்டுவேன் என்று ஒஸ்தி படத்தில் ஒரு வசனம் வருகிறது. சொந்த வாழ்க்கையிலும் நான் அப்படித்தான்.

இசையமைப்பாளர்களின் வேலையில் நான் தலையிடுவது உண்மைதான். என் படங்களில் பாடல்கள் நன்றாக வரவேண்டும் என்று ஆசைப்படுவேன். அதனால், இசையமைப்பாளர்களுக்கு நடு ராத்திரிகளில் போன் பண்ணி பாடல் எப்படி வந்திருக்கிறது? என்று கேட்பேன். யுவன்சங்கர்ராஜாவும், நானும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அவருக்கு என்னைப் பற்றி தெரியும்.

மற்ற இசையமைப்பாளர்கள், என்னை `டார்ச்சர் ஆக நினைக்கக்கூடும். இந்த படத்தின் இசையமைப்பாளர் தமனுக்கும் தொந்தரவு கொடுத்து இருக்கிறேன். பாடல்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த தொந்தரவு. தவறாக கருத வேண்டாம், என்று கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum