தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மு.க. தமிழரசு தயாரிப்பில் அருள்நிதியின் `மௌன குரு’

Go down

மு.க. தமிழரசு தயாரிப்பில் அருள்நிதியின் `மௌன குரு’ Empty மு.க. தமிழரசு தயாரிப்பில் அருள்நிதியின் `மௌன குரு’

Post  ishwarya Wed Apr 10, 2013 6:33 pm

மோகனா மூவிஸ் சார்பில் மு.க. தமிழரசு தயாரிக்கும் படம் மௌன குரு. இதில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே உதயன், வம்சம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக இனியா நடிக்கிறார்.

உமாரி யாஸ், ஜான்விஜய், பால கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, மது, முருகதாஸ், ஹரீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக் கதை, வசனம் எழுதி சாந்த குமார் இயக்குகிறார். இவர் தரணியிடம் தில், தூள், கில்லி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கல்லூரி மாணவன் ஒருவன் செய்யாத தப்பில் மாட்டிக் கொள்கிறான்.

அதில் இருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதே கதை. இதுவரை வந்திராத வித்தியாசமான களத்தில் கிரைம், திரில்லர் படமாக உருவாகிறது.

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி,
எடிட்டிங்: ராஜாமுகமது,
ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன்,
நடனம்: தினேஷ்,
இசை: எஸ்.தமன்,
பாடல்: வாலி, முத்துக்குமார், மதன் கார்கி, யுகபாரதி,
தயாரிப்பு நிர்வாகம்: நமஸ்காரம் சரவணன்.

படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum