வேலாயுதம் – தீபாவளி சரவெடி! பலருக்கு நெத்தியடி!
Page 1 of 1
வேலாயுதம் – தீபாவளி சரவெடி! பலருக்கு நெத்தியடி!
விஜய் படம் ஊத்திக்கிட்டாலே “சும்மா காட்டு காட்டுன்னு காட்டுவோம்”, இதில படம் வேற பத்திக்கிச்சா “காட்டாம இருந்தா நல்லா இருக்குமா அண்ணா?” எதையா? பேசாம பதிவை வாசியுங்க மோனை!
“ஆசாத்” படத்தை முழுமையாகப் பார்க்கா விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக யூ-ரியூப்பில் பார்த்ததில் “வேலாயுதம்” படத்தின் கதை என்ன என்பது படம் பார்க்கும் முன்பே தெரிந்து விட்டது.
முதல் ஸோ பார்ப்பதற்கான வசதி இருந்தும் பார்க்க முடியாத சூழ்நிலை. இதனால் மறுநாள் காலை தீபாவளி தினத்தன்று சி.பி.எஸ் பதிவை மேலோட்டமாகப் படித்துவிட்டேன். நண்பனிடம் வேறு ஆர்வக்கோளாறால் “படம் பற்றி கேட்டுவிட்டேன்”. இதனால் படம் பார்க்கச் செல்லும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனாலும் படம் முழுவதும் என்னால் ஓரிடத்தில் கூட ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
முதற்காரணம் இயக்குனர் ராஜா “ரசித்து, ருசித்து” விஜய் ரசிகர்களுக்காக பண்ணிய விறு விறு திரைக்கதை. இரண்டாவது என் நாயகன் விஜய், மூன்றாவது சந்தானத்தின் காமெடி, நான்காவது அழகு தேவதைகள் ஹன்ஸிகா – ஜெனிலியா, ஐந்தாவது விஜய் அன்டனி என்ற இசை நாதம்… இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்று தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் வருவதென்பதே குதிரைக் கொம்பு. அப்படி பெயர் சொல்லும்படி ஏதாவது படம் வந்தாலும் எங்காவது ஒரு உலக சினிமாவைத் தேடிப்பிடித்து விமர்சகர்கள் ஒப்பிட்டு விடுவார்கள். இந்த நிலையில் ஒரு “பக்கா கமர்சியல்” படமான வேலாயுதம் எந்தப் படத்தின் சாயலிலும் இல்லாமல் வரவேண்டும் என்பதை சில விமர்சகர்கள் ஏன் எதிர்பார்க்கிறார்கள்?
இதனால் படங்களில் வித்தியாசம் காட்ட வேண்டியது திரைக்கதையே! அதை வேலாயுதத்தில் முடிந்தளவு நிறைவேற்றி இருக்கிறார் இயக்குனர். உதாரணத்திற்கு க்ளைமாக்ஸ் சீனையே எடுங்கள். அது அந்நியனை நினைவு படுத்துகின்றது என்பதை நான் மறுக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் நேரு ஸ்ரேடியமாகவும் இருக்கலாம். அதில் என்ன மாற்றத்தைச் செய்யலாம்.
01. ஹீரோ மக்களை அழைக்கவில்லை. வில்லன் தான் அழைக்கிறார்.
02. ஹீரோ தன்னை வெளிப்படுத்தவில்லை. குரலால் மட்டும் மக்களுடன் பேசுகின்றார்.
இது போதுமே! இதை விட வேறு என்ன மாதிரியான க்ளைமாக்ஸ் இந்த படத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என விமர்சன விண்ணர்கள் கருதுகிறீர்கள்?
01. வீடு வீடாக நோட்டீஸ் அடித்து விநியோகிக்கச் சொல்கிறீர்களா?
02. மரண அறிவித்தல் போல மைக் செட் போட்டு ஊர் ஊராகச் சொல்லச் சொல்கிறீர்களா?
03. இந்தியன் கமல் போல் ரி.வியில் நேரடியாகத் தோண்றச் சொல்கிறீர்களா?
04. கேபிள் ரி.வி ஆப்பரேட்டர்களிடம் ஒசாமா பில்லேடன் போல கேசட்டை குடுத்து விடச் சொல்கிறீர்களா?
நீங்களாவது உங்கள் எட்டாம் அறிவைப் பாவித்து எதையாவது சொல்லுங்களேன். எதையாவது கூற வேண்டும் என்பதற்காக “முட்டையில் … பிடுங்கியதைப் போன்று” குறைகளை அடுக்காதீர்கள்.
என் பதிவுலக நண்பர் தன் பதிவில் வேலாயுதத்தின் ஒரு பெரிய குறையைக் கண்டு பிடித்திருந்தார். அதாகப்பட்டது என்னவெனில் “200 கிலோமீற்றர் வேகத்தில் வரும் ரெயினில் எப்படி ஹீரோ தாவி ஏறுவார்?”
அண்ணே! இது தான் தமிழ் சினிமா. இது உங்களுக்குத் தெரியாததல்ல. 1000 கிலோமீற்றர் வேகத்தில் சுற்றும் காற்றாடி இடைவெளிக்குள் ஸ்ரீகாந்தால் பாய முடியும் (போஸ்) எனில், இதே 200 கிலோமீற்றர் வேகத்தில் ஓடும் ரெயினின் இரண்டு பெட்டிகளுக்கிடையே அஜித்தால் பைக்கில் பாய முடியும் எனில் (பரமசிவன்) விஜயால் ஏன் முடியாது?
இதுவா உங்கள் “மிகவும் ஞாபகசக்தியுள்ள” மூளையைக் கசக்கிப் பிழிந்து எடுத்த குறை?
முன்னர் வந்த சில படங்களை ஞாபகப்படுத்துகிறது என்ற “தமிழ் சினிமாவில் எழுதப்படாத குறையைத் தவிர” வேலாயுதத்தில் அப்படி என்ன பெரிய குறையைக் கண்டு பிடித்துவிட்டீர்கள்.?
தீபாவளி ரேஸில் வேலாயுதம் முந்திவிட்டது. நீங்கள் ஆயிரம் குறைகளை அள்ளி வீசினாலும் படம் செம ஹிட். விஜய்க்கு காவலனைத் தொடர்ந்து அடுத்த வெற்றி. (நண்பனில் ஹிட்ரிக் வாய்ப்பு பிரகாசம்) ராஜாவுக்கு ஆறாவது தொடர் வெற்றி. ராசியில்லாத நாயகி ஹன்ஸிகாவுக்கு முதல் வெற்றி.
படம் பலரும் பார்த்திருப்பீர்கள். விமர்சனங்களைத் தேவையான அளவு படித்திருப்பீர்கள். இதனால் விமர்சனங்களை விடுத்து நான் ரசித்த வேலாயுதம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேலாயுதம் – திரை விமர்சனம்
» தயவு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள்! கவுண்டரின் நெத்தியடி!!
» தீபாவளி ரேஸ்..! – தீபாவளி புதுப்படங்களின் அணிவரிசை
» வேலாயுதம் வெற்றி பெறுமா?
» மங்காத்தா, வேலாயுதம்… குழப்பியடிக்கும் தயாரிப்பாளர்கள்!
» தயவு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள்! கவுண்டரின் நெத்தியடி!!
» தீபாவளி ரேஸ்..! – தீபாவளி புதுப்படங்களின் அணிவரிசை
» வேலாயுதம் வெற்றி பெறுமா?
» மங்காத்தா, வேலாயுதம்… குழப்பியடிக்கும் தயாரிப்பாளர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum