தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்-விஜய் இருவருக்கும் தலைவலி கொடுக்கும் தமிழ்படம் இயக்குனர்!

Go down

அஜித்-விஜய் இருவருக்கும் தலைவலி கொடுக்கும் தமிழ்படம் இயக்குனர்! Empty அஜித்-விஜய் இருவருக்கும் தலைவலி கொடுக்கும் தமிழ்படம் இயக்குனர்!

Post  ishwarya Wed Apr 10, 2013 6:01 pm

ஹீரோயிசத்தில் முழ்கிக் கிடக்கும் தமிழ்சினிமாவை கிண்டலடிக்க அச்சு ஊடகம் மட்டுமே இருந்து வந்த சூழலில், சினிமாவில் இருந்து கொண்டே இந்த படாவதிப் படங்களை கிண்டலடிக்க்கிற துணிச்சல் யாருக்கும் இல்லை. ஆனால் வி.சேகர் ‘ஹீரோ’ என்ற படத்தின் மூலம் கொஞ்சம் விமர்சனம் செய்தார்.

ஆனால் விமர்சனத்துக்கு உரிய நமது மாஸ் ஹீரோக்களே விழுந்து விழுந்து சிரிக்க தமிழின் முதல் ஸ்பூப் சினிமாவை படைத்தவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன். இதுவரை வெளியான அனைத்து சூப்பர் டூப்பர் மாஸ் ஹீரோ ஹிட் படங்களையும் ஒரு வழி பண்ணினார் தனது தமிழ்படத்தில்.

குறிப்பாக அந்த உச்சகட்ட காட்சி தமிழ்ரசிகர்களை வயிறு நோக சிரிக்க வைத்தது. போதாக்குறைக்கு லாலாக்கு… உட்டாலக்கடி… இப்படி வரும் தமிழ்பட பாடல்களின் சொற்களை வைத்து ஒரு முழு பாடலையே அந்தப் படத்தில் இடம்பெறச் செய்தார்.

தற்போது தமிழ்படத்தின் சாதனையை முறியடிக்க அடுத்த ஸ்பூப்புக்கு தயாராகிவிட்டார். இந்தமுறை மிகத் துணிச்சலாக தல, தளபதி இருவரையும் கலாய்க்க முடிவு செய்து ‘ தலவலி’ என்ற தலைப்போடு களம் இறங்கிவிட்டார்.

அடுத்தமாதம் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறாரம் அமுதன். இந்தப் படத்தில் அஜித்தின் ரெட் முதல் மங்காத்தா வரை, அதேபோல விஜயின் காதலுக்கு மரியாதை தொடங்கி காவலன் வரையிலான படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை ஸ்பூப் செய்கிர மாதிரி திரைக்கதை எழுதியிருகிறாராம்.

இம்முறையும் தனது உதவியாளர் சந்ருவையே வசனம் எழுதும் பொறுப்பை ஒப்படைத்து இருகின்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum