தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாய்ப்பு கேட்ட நடிகை – ஆறுதல் சொன்ன டைரக்டர்

Go down

வாய்ப்பு கேட்ட நடிகை – ஆறுதல் சொன்ன டைரக்டர் Empty வாய்ப்பு கேட்ட நடிகை – ஆறுதல் சொன்ன டைரக்டர்

Post  ishwarya Wed Apr 10, 2013 5:38 pm

வெளுத்துக்கட்டு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அருந்ததி. தெரிந்தோ தெரியாமலோ நட்சத்திரத்தின் பெயரையே இவருக்கு வைத்திருக்கிறார்கள். பெயருக்கேற்ப ஜொலிக்க வேண்டிய பொண்ணு, விளக்கெண்ணை தடவிய வெண்ணிலா போலானார். ஏன்? எல்லாமே சொந்தமாய் வைத்துக் கொண்ட சூனியம்தான்.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம்தான் வெளுத்துக்கட்டு. அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த விஜய்யே இவரை பாராட்டுகிற அளவுக்கு தமிழும் பேசி, அழகிலும் அசத்தினார். ஆனால் அப்படத்தின் ரிசல்ட் அருந்ததியை பாதித்ததாக தெரியவில்லை. மீண்டும் கலிங்கத்து பரணி என்றொரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஐந்து கோவிலான்தான் அப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று படப்பிடிப்பிலிருந்து மாயாமாய் மறைந்தார் அருந்ததி. அப்புறம் ஏற்பட்ட கசாமுசாவினால் படமே நின்று போனது.

அதன்பின் கருப்பர் நகரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதுவும் வெளிச்சமில்லை. தமிழ் பேச தெரிந்த நடிகைக்கு தமிழ்நாட்டில் இடமிருக்காது என்ற சித்தாந்தம் இவர் விஷயத்திலும் வெளிப்பட, சொந்த ஊருக்கே பொட்டியை கட்டிவிட்டார். ஆனால் இந்த கோபமெல்லாம் கொஞ்ச நாளைக்குதான்.

மேக்கப் முகத்திற்கு பேக்கப் இல்லை என்பது போல மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம் அவருக்கு. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தவர், டைரக்டர் தங்கர்பச்சானை சந்தித்து தனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டாராம். அவர் என்ன முடியாது என்றா சொல்வார்? ஆகட்டும் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிக்கலில் சிக்கிய குஷ்பு… டிவிட்டரில் ஆறுதல் சொன்ன சின்மயி!
» பிரியங்கா சோப்ராவிடம் வாய்ப்பு கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
»  ஜேம்ஸ் கேமரூனிடம் வாய்ப்பு கேட்ட லட்சுமிராய்!
» பாராட்டிய ஜீவா வாய்ப்பு தருவாரா? – காத்திருக்கும் புது மியூசிக் டைரக்டர்
» சினிமா வாய்ப்பு தருவதாக என் பெயரில் மோசடி: டைரக்டர் சசிகுமார் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum