பெரிய வெற்றிக்குப் பிறகும் தமிழில் தொடர்ந்து படங்கள் இல்லாதது ஏன்? – கார்த்திகாவுடன் ஒரு சந்திப்பு
Page 1 of 1

கார்த்திகா தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரோடு டூயட் பாடிக் கொண்டிருந்தார். மகளின் சுமையை பகிர்ந்துகொள்ள அம்மா ராதாவும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார். கார்த்திகாவோடு ஒரு கலகல சந்திப்பு.
இத்தனை பெரிய வெற்றிக்குப் பிறகும் தமிழில் தொடர்ந்து படங்கள் இல்லாதது ஏன்?
நிறைய கதைகளை அம்மா கேட்குறாங்க. எனக்கு எது செட் ஆகும் என்கிற விஷயம் அம்மாவுக்குத் தெரியும். அதனால் படங்கள் தள்ளிக்கொண்டே போகுது. இந்த இடைவெளியில் தெலுங்கில் ஒரு படம் பண்ண ஓடிவந்துட்டேன்.
சம்பளம் அதிகம் கேட்பதால்தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் வர்றதில்லை என்று நியூஸ் பரவுதே?
யார்கிட்ட நான் அதிக சம்பளம் கேட்டேன்னு சொல்லுங்க பார்ப்போம். ஆனால், சம்பளம் பேசாமல் யாராவது நடிக்க வருவாங்களா சொல்லுங்க. அதுவும் அம்மாவுக்கு இருக்குற மரியாதையை நான் காப்பத்தணுமே. கார்த்திகாவுக்கு என்ன சம்பளம் தரணும்ங்கிறது டைரக்டர்களுக்குத் தெரியும். நானா ஒரு போதும் அதிக சம்பளம் கேட்டதில்லை. பணம் முக்கியம் இல்லைங்க.
தமிழ் தவிர மற்ற மொழிகளில் வாய்ப்பு எப்படி?
மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லா மொழிகள்லயும் சான்ஸ் வந்துகிட்டிருக்கு. அதுக்கு காரணம் ‘கோ’ வெற்றி. அதேபோல ஹிந்திப் படங்கள்லயும் நடிக்க ஆர்வமா இருக்கேன். பார்ப்போம், பெரிய ஹீரோ யாராவது கூப்பிடட்டும்.
உங்கள் புருவம் ஒரு தனி அழகுதான். ஆனால், தோற்றத்தை மாற்றி நடிக்கும்போது சரியா வருமா?
என்னோட தோற்றத்திற்காகதானே நடிக்கக் கூப்பிடுவாங்க. அப்புறம் எப்படி என் புருவ அழகு அதுக்கு செட் ஆகாமல் போகும். கார்த்திகாவின் கேரக்டர்ல, நடிப்புல வித்தியாசம் காட்டினால் போதும்தானே.
அழகுக்காக தினமும் மெனக்கெடுவீங்களா?
மும்பையில் உள்ள ஐந்து வயதுப் பெண் குழந்தைகளிலிருந்து பியூட்டியை மெயின்ட்டெயின் பண்றதுல கவனமா இருப்பாங்க. அதனால இது சாதாரணமா பண்ற விஷயமாகிடுச்சு. என்னைப் பொறுத்தவரை என் உடல்வாகு எனக்கு ப்ளஸ். எவ்வளவு சாப்பிட்டாலும் ஸ்லிம்மாகவே இருக்கும். தினமும் டான்ஸ் பயிற்சிக்குப் போவேன். இருக்கவே இருக்காங்க அம்மா; டிப்ஸை அள்ளிவிடமாட்டாங்களா?
உங்கள் தங்கை துளசி நடிக்கப் போறதா நியூஸ் வந்ததே?
அது தவறான செய்தி. அவ இப்பதான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டிருக்கா. ஆனால், துளசியும் கண்டிப்பா நடிக்க வருவா. அதை அம்மாவே முறைப்படி உங்களுக்குச் சொல்லுவாங்க. அதுக்கு இன்னும் டைம் இருக்கு.
இப்ப இருக்கும் இயக்குநர்கள் பலரும் உங்க அம்மாவின் ரசிகர்கள். இந்த செல்வாக்கில் சான்ஸ் கேட்கலாமே?
கேட்டால் அது என் அம்மாவுக்கு பெருமை இல்ல. அதோடு என் முகம் கதைக்கு செட் ஆகி அதுக்காக என்னைத் தேடி அம்மாகிட்ட அனுமதி கேட்டால் அதுதான் எனக்கும் அம்மாவுக்கும் சந்தோஷம் இல்லையா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» நஸ்ரியா நசீமுக்கு தமிழில் பெரிய இடம் இருக்கு!
» பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வி: ஆபாச படங்களுக்கு திரளும் ரசிகர்கள்
» நவீன தொழில்நுட்பத்தில் திரையுலகம்: தமிழில் தயாராகும் ’3 டி’ படங்கள்
» தமிழில் படங்கள் இல்லாததால் விரக்தி: மும்பைக்கு குடியேறும் நடிகை சிம்ரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum