தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான் – சசிக்குமாருடன் ஒரு இனிய சந்திப்பு

Go down

தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான் – சசிக்குமாருடன் ஒரு இனிய சந்திப்பு Empty தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான் – சசிக்குமாருடன் ஒரு இனிய சந்திப்பு

Post  ishwarya Wed Apr 10, 2013 4:40 pm

நீங்க அழுதால் ஆறுதல் சொல்லி உங்கக் கண்­ணீரைத் துடைப்பேன். தேற்ற முடியாத துயரம் என்றால், உங்களோடு சேர்ந்து நானும் அழுவேன். இதுதான் என் குணம், இயல்பு. மத்தபடி ஒருத்தனோட கண்ணீ­ரை விற்கவோ, வெகுஜனப் பார்வைக்கு வைக்கவோ என்னால முடியாது. ‘போராளி’ங்கிற தலைப்பை வெச்சுக் கிளம்புற பரபரப்பை நான் பயன்படுத்திக்க விரும்பலை. எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல், துடைச்சுப்போட்ட மனசோடுதான் ரசிகர்களை நான் எதிர்கொள்ள விரும்புறேன்.

‘ஈழத்து சோகங்களை நாசூக்காச் சொல்லி இருக்கேன்’, ‘இலைமறை காயா விளக்கி இருக்கேன்’னு சொல்லி, தூண்டில் வீச நான் விரும்பலை. மழைக்கான அறிகுறி தெரிஞ்சதும் பாதுகாப்பான இடத்துக்கு உணவைத் தூக்கிட்டு ஓடுற எறும்புகூட ஒரு போராளிதான். அந்த மாதிரி, எங்கோ ஒரு மூலையில இருந்தபடி அனுதினப் போராட்டங்களை எதிர்கொள்கிற ஒருத்தன்தான் ‘போராளி’!.

‘போராளி ஈழத்தின் கதையா?’ என்கிற கேள்விக்குத்தான் இப்படிப் பட்டாசாகப் படபடத்தார் சசிகுமார்.

படத்தை விடுங்கள்… ஈழம் சம்பந்தமான பகிர்வுகளில்கூட நீங்கள் பெரிய அளவில் ஈடுபாடு காட்டுவது இல்லையே?

தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்தணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ… என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்பவும் ‘போராளி’ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான்.

ஆனால், கண்­ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை. முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை. அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம்.

தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கப்போறது இல்லை. தமிழ் உணர்வுகளைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது? கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது..? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!

‘போராளி’க்காக இரட்டைக் குதிரை சவாரியில் பட்டையைக் கிளப்பி இருக்கீங்களே.. எதுவும் கிராஃபிக்ஸா?

கிராஃபிக்ஸானு நீங்க ஆச்சர்யமா கேட்கிறதே எங்க உழைப்புக்குக் கிடைச்ச வெற்றிதான். மெரினாவில் ஒத்தக் குதிரை சவாரி போறப்பவே உயிரைக் கையில பிடிச்சுக்கத் தோணும். அப்படின்னா, இரட்டைக் குதிரைச் சவாரி எப்படி இருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்க. இக்பால், திலீப்னு இரண்டு குதிரைகளுக்கு கடலை மிட்டாய்லாம் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணி சவாரி பண்ணேங்க. குதிரைச் சவாரிக்கான பேலன்ஸே தொடைகள்தான். குதிரையை அப்படியே பிடிச்சுக்க கை, கால்களைவிட தொடைதான் முக்கியம். ‘தொடை தட்டிக் கிளம்பிட்டான்’னு சொல்வாங்களே… அப்படி ஒரு மூர்க்கத்தோட இரட்டைக் குதிரைச் சவாரியை சக்சஸ் பண்ணி இருக்கோம்!

நடிகராகவும் இயக்குநராகவும் ரிஸ்க் இல்லாம சம்பாரிக்கிறதை விட்டுட்டு, ஏன் தயாரிப்பாளராகவும் மாறி பாரம் சுமக்குறீங்க?

இது நான் விரும்பிச் சுமக்கிற சுமை. முதல் படத்துக்கே தயாரிப்பாளர் தேடிப் போகாத நானா இனிமேல் தேடப் போறேன்? உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறவங்களைத் தயாரிப்பு உலகம் தள்ளி வெச்சுத்தான் பார்க்குது.

‘இதான் கதை… இவ்வளவுதான் பட்ஜெட்’னு சொன்னா, இங்கே ஏற்க ஆள் இல்லை. ‘இந்த பட்ஜெட்டுக்குள் முடிச்சிடலாம்’னு சொல்லிட்டு, டபுள் மடங்கா இழுத்து விடுற பழக்கம் எனக்கு இல்லை. ‘புதுமுகங்களை வெச்சு பீரியட் ஃபிலிம்’னு சொல்லி, ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்குத் தயாரிப்பாளர் தேடி அலைஞ்சிருந்தால், இன்னிக்கு வரைக்கும் ஒவ்வொரு ஆபீஸா ஏறி இறங்கிட்டுத்தான் இருந்திருப்பேன்.

இன்னும் உடைச்சுப் பேசணும்னா, யாரையும் திருப்திப்படுத்துற வேலையை என்னால செய்ய முடியலை. தயாரிப்பாளரைச் சுத்தி இருக்கிறவங்களோட அநாகரிகத் தலையீடுகளை ஒரு படைப்பாளியா பொறுத்துக்க முடியலை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு… எனக்கு நானே முதலாளியாக இருப்பதுதான்!

புதுமுக இயக்குநர்களுக்கோ, தோல்விப் படம் கொடுத்தவங்களுக்கோ வாய்ப்பு கொடுக்கப் பலரும் தயங்குறாங்க. இங்கே தோல்விங்கிறது புதைகுழியா பார்க்கப்படுது. ஆனால், நான் தோத்தவங்களை வாரி அணைச்சுக்க விரும்புறேன். கைதூக்கிவிடுறதுதான் நான் கத்துக்கிட்ட கலை. விழுந்து எந்திரிச்சு வர்றவங்களுக்குத்தான் என் ஆபீஸ் முதல்ல திறக்கும். போட்டி போட்டு ஸ்கூல் நடத்துறவங்களுக்கு மத்தியில், டுடோரியல் சென்டர் நடத்துறதை நான் பெருமையா நினைக்கிறேன்!

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும்கூட கோடம்பாக்கத்துக்கு முழுமையான விடிவு கிடைக்கவில்லை என்கிறார்களே?

அரசியலுக்கும் அனுதினப் பொழுதுபோக்குக்கும் என்னங்க சம்பந்தம்? எப்பவுமே ரிமோட் மக்கள் கையில இருக்கு. இரண்டு நிமிஷம் போரடிச்சாலும் சேனலை மாத்திடுவாங்க. அவங்க கவனத்தைக் கட்டிப் போடுற அளவுக்கு நாமதான் போராடணும். கடந்த ஆட்சியிலும் புதுமுக இயக்குநர்கள் ஜெயிச்சாங்க. இந்த ஆட்சியிலும் ஜெயிக்கிறாங்க. மக்கள் தராசு முள் மாதிரி இருக்கிறப்ப, நம்மளோட வெற்றியை ஆட்சியோ, காட்சியோ தடுத்துட முடியாது!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum