தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை! – ஜீ.வி.பிரகாஷ்குமார்

Go down

ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை! – ஜீ.வி.பிரகாஷ்குமார் Empty ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை! – ஜீ.வி.பிரகாஷ்குமார்

Post  ishwarya Wed Apr 10, 2013 2:54 pm

ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான படத்தின் தலைப்புதான் ‘வெயிலே’ தவிர இசை பனிக்குழைவாக ரசிகர்களின் செவிகளை ஜில்லிட வைத்தது. ‘வெயிலில்’ தொடங்கி 26 படங்களைத் தாண்டிவிட்ட ஜீ.வி பிரகாஷ்குமாருக்கு தற்போது இருபத்தாறு வயது. இந்திய சினிமாவின் மிக இளமையான இந்த இசையமைப்பாளரின் பலம் மெலடி! பாலா, பாரதிராஜா படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் தருணத்தில் ஜீ.வி.பிரகாஷ் பிரத்யேகமாக அளித்த நேர்காணல் இது.

பாலா படத்துக்கு இசை, பாரதிராஜா படத்துக்கு இசை, என்று தமிழின் மிக உயரிய படைப்பாளிகளுக்கு இசையமைக்கிறீர்கள்? இந்த கணத்தில் எப்படி உணர்கிறீர்கள்?

இது எனக்கு மிக முக்கியமான தருணம். கோல்டன் மூவ்மெண்ட் என்று சொல்ல வேண்டும். பாரதிராஜா- இளையராஜா கூட்டணியில் அமைந்த படங்களை இரண்டு மூன்றுமுறை பார்த்து பின்னனி இசை நுணுக்கங்கள் பற்றி என் இசை நண்பர்களோடு டிஸ்கஸ் செய்திருக்கிறேன். இப்போது அவர்களது படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு எனது மடியில் விழுந்திருப்பதில் எனக்கே எக்ஸைட்டிங்காக இருக்கிறது. அதேபோல பாலிவுட்டில் நான் நேசிக்கும் கிரியேட்டர் ராம் காஷ்யாப் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைப்பது என்னை பாலிவுட்டில் தனித்து அடையாளம் காட்ட உதவி இருக்கிறது. அதையும் பெருமையாகவே கருதுகிறேன்.

‘தெய்வத்திருமகள்’ படத்தின் இசை ஹிட்! ஆனால் அதில் காப்பி செய்யப்பட்ட இசை இருப்பதாக பேசப்பட்டதே?

இரண்டு பாடல்களை இயக்குநரின் விருப்பத்தின் பேரில் அடாப்ட் செய்தேன். ஆனால் எனக்கான சுதந்திரத்தில் தலையிடாதபோது ஒரிஜினலான இசையைக் கொடுத்திருக்கிறேன். எனது வெற்றிபெற்ற பாடல்களே இதற்கு சாட்சி.

தற்போது எத்தனை படங்களுக்கு இசையமைத்து வருகிறீர்கள்?

‘வட சென்னை’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ஆகிய படங்களின் பாடல்கள் கம்போஸிங் முடிந்து விட்டது. செல்வராகவனின் ‘மாலைநேரத்து மயக்கம்’ படத்துக்கான பின்னணி இசையமைப்பு வேலைகள்தான் இப்போதைய பணி. இது முடிந்ததும் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் கண்ணன் இயக்கி வரும் ‘கரிகாலன்’ படத்துக்கு கம்போஸிங் தொடங்குகிறேன்.

அடுத்து விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் ‘அடலேறு’ ஆகிய படங்களுக்கான கம்போஸிங் ஆரம்பிக்க வேண்டும். இதன்பிறகே பாலா சார் படம் தொடங்குகிறது. பாலாவுக்கு முடித்து விட்டு என்னிடம் வா என்று பாரதிராஜா சார் சொன்னார். இரண்டு பேருமே போதிய சுதந்திரம் கொடுப்பவர்கள். அதுதான் ஒரு இசையமைப்பாளருக்கு வேண்டும்.

நட்சத்திரங்களை, தொடர்ந்து பாட வைப்பது ஏன்?

இதில் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. இயக்குநர்களுக்கு வேண்டுமானல் இருக்கலாம். இயக்குநர்கள் விரும்புவதாலும், பாடலின் சூழ்நிலைக்கு மாறுபட்ட குரல் தேவைப்படுவதாலும் பாட வைக்கிறோம். இதில் எனது முடிவு மட்டுமே கிடையாது.

‘காளை’ படத்தில் சிம்பு, மம்தா மோகன்தாசை பாட வைத்தேன். ‘மதராசபட்டினம்’ படத்தின் மழைப்பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன், விக்ரம், நாசர் பாடினார்கள். விக்ரம் சாரை ‘தெய்வத்திருமகளிலும்’ பாட வைத்தேன். இது நானே எடுத்த முடிவுதான். காரணம் ‘கதைசொல்லப் போறேன்’ பாடலை, சூழ்நிலைபடி விக்ரம் சாரின் கிருஷ்ணா கேரக்டர் வாய்ஸில் பாடவேண்டும். அதுதான் நம்பகத்தன்மையோடு இருக்கும்.

அதனால்தான் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கும் படத்திலும் விகரம் ஒரு பாடலை பாட இருக்கிறார். பெண் பாடகர்களில் தொடர்ந்து ஆண்ட்ரியா பாடுகிறார். ரசிகர்களை இழுக்கும் குரல் எங்கே இருந்தாலும், பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒரு இசையமைப்பாளரின் வெற்றிக்கு மிக முக்கியம்.

தற்போது நீங்களும் ஒரு பாடகராக உங்களை முன் நிறுத்திக் கொள்கிறீர்களே?

இதற்கு நான் வெற்றிமாறனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்! ‘ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ‘யாத்தே யாத்தே’ பாடலை பைலட் டிராக்காக நான் முதலில் பாடியிருந்தேன். இது பாட வரும் பாடகர்களுக்கான ஒரு டெமோ வாய்ஸ்தான். என்னை விட அந்தப் பாடலை இரண்டு முன்னணிப் பாடகர்கள் நன்றாகப் பாடியிருந்தார்கள். ஆனால் வெற்றிமாறனும் தனுஷும் எனது குரல்தான் அந்த காட்சியின் மனநிலை, கதாபாத்திரத்தின் மனநிலை இரண்டுக்கும் பொருத்தமாக இருப்பதாகச் சொல்லி பைலட்டு டிராக்கையே பயன்படுத்தச் சொன்னார்கள். நான் இன்று பாடத்தொடங்கியதற்கு அவர்கள்தான் மூலகாரணம்.

சைந்தவி உங்கள் இசையில் மிக மென்மையான பாடல்களை பாடுகிறாரே? உங்கள் திருமணம் எப்போது?

உண்மைதான்! எனது மெலடிக்கள்தான் அவரது முதன்மையான தேர்வு. என்றாலும் பெப்பியான பாடல்களை பாடும் திறமை அவருக்கு நிறையவே இருக்கிறது. எனது முதல் க்ரிட்டிக், முதல் ரசிகை எல்லாமே சைந்தவிதான். உங்களுக்குச் சொல்லாமல் திருமணம் எப்படி? இப்போதைக்கு பெரிய இயக்குநர்களுக்கு கதைக்கான இசையைத் தருவதில் மும்முரமாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அல்லது இறுதியிலோ அழைப்பிதழோடு உங்களை சந்திப்பேன்!

நீங்கள் ரீமிக்ஸ் செய்வதற்கு எதிரான இசையமைப்பாளரா?

மற்றவர்களை நான் தடுக்க முடியாது! ஆனால் ரீமிக்ஸ் செய்வதில் எந்த க்ரியேட்டிவிட்டியும் இல்லை என்பது என் கருத்து! ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில், ‘அதோ அந்த பறவை போல’ பாடலுக்கு ரீமிக்ஸ் செய்தால் கதையை நகர்த்திச் செல்ல உதவியாக இருக்கும் என்றார் செல்வராகவன். அதனால் அதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு எந்தப் படத்திலும் நான் ரீமிக்ஸ் செய்ய ஒத்துக்கொண்டது இல்லை. இனி ரீமிக்ஸ் இங்கே எடுபடாது.

வெற்றிமாறன் உங்களை ஹீரோவாக நடிக்க வரும்படி அழைத்தது உண்மையா?

வெற்றிமாறன் என்றில்லை. எனக்கு நெருக்கமான இயக்குநர்கள்கூட, ஹீரோவாக நடிக்க கேட்டனர். அன்புடன் மறுத்து விட்டேன். ஒரு பாடலில் சில ஷாட்டுகளில் முகம் காட்டுவதில் ஆட்சேபனை இல்லை. அதையும்கூட அடிக்கடி செய்தால் ரசிகர்கள் வெறுத்து விடுவார்கள்.

முக்கியமாக எனது தாத்தா, அம்மா, மாமா, என எல்லோரும் இசைத்துறையை சேர்ந்தவர்கள். நானும் அவர்கள் வழியைப் பின்பற்றவே விரும்புகிறேன். தெரிந்த தொழிலைச் செய்வோம், அதிலும் சிறப்பாக செய்வோம் என்பதே என் பாலிஸி. இசைத்துறையில் சாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. நடிப்பு எனக்கு சரிப்பட்டு வராது. ஏனென்றால் எனக்கு நடிப்பு தெரியாது.

உங்கள் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் பாணியிலிருந்து விலகிவிட்டீர்கள் இல்லையா?

ஆமாம்! எனது முதல் மூன்று படங்களில் மாமாவின் சாயல் இருக்கும். ஆனால் அதன்பிறகு எனக்கான பாணியை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னை மிகவும் பாதித்தவர் மாமாதான் என்றாலும், ராஜா சார், எம்.எஸ்.வி சார் இவர்களின் இசைச் சாரம் என்னையும் அறியாமல் எனக்குள் இருக்கிறது. எனது இசையில் வாத்தியங்கள், வார்த்தைகள் இரண்டுமே தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இரைச்சலான இசை எனக்குப் பிடிக்காது!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum