தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசன்னா-சிநேகா அழகான ஜோடிதான்! – சொல்கிறார் அருண் வைத்தியநாதன்

Go down

பிரசன்னா-சிநேகா அழகான ஜோடிதான்! – சொல்கிறார் அருண் வைத்தியநாதன் Empty பிரசன்னா-சிநேகா அழகான ஜோடிதான்! – சொல்கிறார் அருண் வைத்தியநாதன்

Post  ishwarya Wed Apr 10, 2013 2:47 pm

பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் போதுதான் காதலின் ருசியை காதலர்கள் அதிகம் அனுபவிக்கின்றனர். ஆனால், திரையுலக பிரபலங்களுக்கு காதலின் ருசியை அனுபவிக்க முடிவதில்லை. எப்படித்தான் பொத்தி வைத்தாலும் வெளியே கசிந்துவிடுகிறது. சமீபத்திய உதாரணம் பிரசன்னா சிநேகா காதல்!

“எங்கள் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதித்துவிட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது” என்று சினேகாவின் காதலர் என்ற கூடுதல் தகுதியுடன் நடிகர் பிரசன்னா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்றும், இருவரும் தங்கள் காதலை தம்தம் பெற்றோரிடம் கூறிவிட்டனர். அவர்களின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர் என்கிறார்கள்.

செய்தியைச் சொல்லும் எல்லோருமே சொல்லும் இன்னொரு விஷயம் ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்பதுதான். ஆனால், இந்த ஜோடிப் பொருத்தம் அழகானது என்று முதன்முதலில் கண்டுபிடித்தவர் தன்னுடைய அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இவர்களை ஜோடியாக்கிய இயக்குனர் அருண் வைத்தியநாதன்.

இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் பேசினோம்.

“இவரின் படத்தில் நடிக்கும் நடிக-நடிகைகள் நிஜ காதலாராக மாறிவிடுவார்கள் அந்த ராசி அருண் வைத்தியநாதனிடம் உள்ளது என்று எழுதப்போகிறீர்களா?” என்ற அவரின் குறும்பு அடுத்தவர்களின் காதல்பற்றி கேட்டால் கோபித்துகொள்வாரோ என்றிருந்த சின்ன தயக்கத்தைப் போக்கியது.

‘‘உங்களின் கதைக்கு நடிகர் பிரசன்னா, நடிகை சிநேகா பொருத்தமாக இருப்பார்கள் என்று நினைத்து தேர்வு செய்தீர்களா? அல்லது ஒரு தம்பதியருக்கு உரிய ஜோடி பொருத்தம் சரியாக இருப்பதாக தோன்றியதால் இருவரையும் தேர்வு செய்தீர்களா? என்ற நமது கேள்வியை ஒரு அழகான புன்னகையோடு எதிர்கொண்டவர், ஒரு இளம் சாப்ட்வேர் இன்ஜினியர் கதாபாத்திரத்திற்கு பிரசன்னா சரியாக பொருந்துவார் என்று தோன்றியது.

அதுபோல் ஒரு குடும்பப்பாங்கான, தனக்கு மனைவியாக வரபோகிறவள் இப்படிதான் இருக்கணும் என்ற நினைக்கும் அளவிற்கு அழகான ஒரு பெண் தேவைப்பட்டாள். அப்போது எனக்கு உடனே கண்முன் வந்து நின்றது நடிகை சிநேகாதான். ஆகவே இருவரையும் தேர்வு செய்தேன். அதற்கும் மேல் இரு கதாபாத்திரங்களுமே நுணுக்கமாக உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டிய நிலை இருந்தது. அதனாலும் என் சாய்ஸாக அவர்கள் இருந்தார்கள் என்றவரிடம்,

ஷூட்டிங்கில் இருவரும் எப்படி? என்றோம்.

என் படத்தில் நடிப்பதற்கு முன்பு பிரசன்னாவும், சிநேகாவும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததுகூட இல்லை தெரியுமா?. அச்சமுண்டு அச்சமுண்டு மொத்தம் 28 நாட்கள்ல படப்பிடிப்பு அனைத்தையும் முடித்த படம். அதுவும் முழுப்படமும் அமெரிக்காவுல தயாரானது.

அங்கு 12 மணிநேர கால்ஷீட். எல்லோரும் பறந்துகிட்டே இருப்போம். அந்த நாட்களில் அவர்களுக்குள் ஆரோக்கியமான நட்பு உருவாகியது என்பது உண்மை. நல்ல நண்பர்களாக மாறிபோனார்கள். அவர்கள் இருவரும் மட்டுமில்ல நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்களாகவே பழகினோம் என்றவர்,

இப்போதும் சொல்கிறேன்… இருவரும் அழகான ஜோடிதான்! என்று சொல்லி முடித்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum