செங்காட்டில் அறிமுகமாகும் நான்கு புதிய ஜோடிகள்
Page 1 of 1

செங்காடு என்ற புதிய படத்தில் நான்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.
எச்.எம்.டி. பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வி.இராவணன் தயாரித்துள்ள படம் ‘செங்காடு’. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் ரமேஷ் ராமசாமி.
இந்தப் படத்தில் மொத்தம் நான்கு ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர்.
புதுமுகங்கள் அருண்பிரகாஷ் – ரூபா, சுரேஷ் – நகினா, உத்தம் – விமலா, விக்கி – ப்ரியா என நான்கு ஜோடிகளுடன் முத்துக்கருப்பன், அன்பழகன், வேணுகோபால், ரகுநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் ரூபா, ஐந்து தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பித்தக்கது.
ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்க, பாடல்களை இளையகம்பன் எழுதி உள்ளார். மணி ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் பாபியா எடிட்டிங் செய்துள்ளார். நிர்மல் நடனம் அமைக்க, கலையை பூபதி கவனிக்கிறார். பாலன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இது வரை சினிமா படப்பிடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, வேதாரண்யம் பகுதியில் உள்ள அழகிய கிழகிய கிராமங்களில் செங்காடு படப்பிடிப்பு நடந்தது.
செங்காடு குறித்து இயக்குநர் ரமேஷ் ராமசாமி கூறுகையில், “இது நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதை. நண்பர்களுக்குள் துரோகம் நடந்தால் அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அழுத்தமான திரைக்கதைதான் இந்தப் படத்துக்கு முக்கிய பலம்.
காதல், கவர்ச்சி, நட்பு, பாசம், சென்டிமெண்ட், நகைச்சுவை, என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஜனரஞ்சகப் படமாக செங்காடு அமைந்திருக்கிறது. மற்ற மொழிகளிலும் வெளியிடுகிற அளவுக்கு இது கமர்சியல் படமாக உருவாகி உள்ளது.
புதிய கோணத்தில் திரைக்கதை அமைத்து சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக உருவாகி உள்ளது. ஒரு இடத்தில் கூட போரடிக்காமல், காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத சம்பவங்களோடு படு வேகமான திரைக்கதை, பரபரப்பும், விறுவிறுப்பும் கொண்ட காட்சிகள், எதிர்பாராத க்ளைமாக்ஸ் என படம் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு உருவாகி உள்ளது…” என்றார்.
புதுமுகங்களை வைத்து படம் இயக்க காரணம் என்ன? என்று அவரிடம் கேட்டதற்கு, “இந்த கதையில் யார் நடித்தாலும் சுவராஸ்யம் குறையாது. இதில் கதைதான் ஹீரோ. பிரபல கதாநாயகர்களை தேடிச் சென்று நான்கு கதாநாயகர்களை இணைத்து படமெடுப்பது இந்த காலகட்டத்தில் சாத்தியமா சொல்லுங்க…. அதனால் புதுமுகங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். எல்லோரும் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்கள். அவர்கள் புதுமுகங்கள் என்பதை விட அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார்கள். படமும் பார்ப்பதற்கும் புதுசாக இருக்கும்.
அதே போல யதார்த்தம் இருக்க வேண்டும் என்று கிராமங்களை நோக்கிச் சென்றேன். அதுவும் படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்திருக்கிறது. கற்பனை கதையாக இருந்தாலும் யதார்த்தம் அதன் அழகு கெடாமல் இருக்கும். இப்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதியில் பாடல் இசை வெளியிடுகிறோம். அதன் பிறகு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்…,” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் அறிமுகமாகும் மம்மூட்டியின் மகன்
» காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள்
» நிஜ காதல் ஜோடிகள் நடிக்கும் ‘கம்பன் கழகம்’
» இன்று காதலர் தினம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகள்
» இசையமைப்பாளராக அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum