தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சி வேடத்தால் கார்த்தி பட வாய்ப்பை மறுத்த பாவனா!

Go down

கவர்ச்சி வேடத்தால் கார்த்தி பட வாய்ப்பை மறுத்த பாவனா! Empty கவர்ச்சி வேடத்தால் கார்த்தி பட வாய்ப்பை மறுத்த பாவனா!

Post  ishwarya Wed Apr 10, 2013 2:03 pm

கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என கூறியதால் நடிகர் கார்த்தி ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் நடிகை பாவனா. `அசல் படத்திற்கு பிறகு தமிழில் வேறு படங்கள் கிடைக்காததால் மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்து வரும் பாவனா தமிழில் கார்த்தியுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், கார்த்தியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மைதான். கதை கேட்டபோது 2 ஹீரோயின் சப்ஜெக்ட் என தெரிய வந்தது. அதோடு அந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடிக்க கூடிய காட்சிகளும் இருப்பது தெரியவந்தது. கவர்ச்சியாக உடை அணிவது எனக்கு செட் ஆகாது. எனவே அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன், என்று கூறியுள்ளார்.

தற்போது கன்னடத்தில் சுதீப் ஜோடியாக `விஷ்ணு வர்த்தனா என்ற படத்திலும், கணேஷ் ஜோடியாக `ரோமியோ என்ற படத்திலும் நடித்து வரும் பாவனா, இந்த இரண்டு படங்களும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள். தொடந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் தமிழிலும் கதைகளை கேட்டு வருகிறேன். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் உடனடியாக நடிப்பேன், என்றும் கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum