தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பானுவிடம் வாய்ப்பை பறிகொடுத்த வேதிகா

Go down

பானுவிடம் வாய்ப்பை பறிகொடுத்த வேதிகா  Empty பானுவிடம் வாய்ப்பை பறிகொடுத்த வேதிகா

Post  ishwarya Tue Mar 12, 2013 5:28 pm

‘மதராஸி, ‘முனி, ‘பரதேசி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் வேதிகா. தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் காஜல் அகர்வால், சமந்தா நடித்த ‘பிருந்தாவனம் என்ற படம் கன்னடத்தில் ‘பிருந்தாவனா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. மாதேஷ் டைரக்ட் செய்கிறார். தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் வேடத்தில் கார்த்திகாவும், சமந்தா வேடத்தில் வேதிகாவும் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். தற்போது திடீரென்று வேதிகா படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் ‘தாமிரபரணி பானு நடிக்கிறார். இவர் பிற மொழி படங்களில் முக்தா எல்சா ஜார்ஜ் என்று பெயர் மாற்றிக்கொண்டு நடிக்கிறார்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் நடித்திருந்த பானு இப்படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறார். இது பற்றி அவர் கூறும்போது, ‘இதுவரை கிராமத்து பெண் வேடம் ஏற்று தாவணி, சேலை அணிந்து நடித்து வந்தேன். முதன்முறையாக நவநாகரீக பெண் வேடம் ஏற்கிறேன். எனது தோழிகள் பாவனா, பாமா போன்றவர்கள் கன்னட படங்களில் தங்களுக்கென ஒரு இடம் பிடித்திருக்கின்றனர். அந்த வரிசையில் கன்னடத்தில் நான் நடிப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹீரோ தர்ஷன் ‘கன்னடத்தில் பெரிய நடிகர் என என்னிடம் நவ்யா நாயர் கூறி இருக்கிறார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum