கமல் கைவிட்ட படத்தில் அஜய் தேவ்கான் – வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கின்றது
Page 1 of 1

தமிழில் இதுவரை படங்கள் எதுவும் இயக்காமல், ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச இசை ஆல்பங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தவர், காட்சிமொழியின் மீது கணமான ஆளுமை கொண்டவரான இயக்குனர் பரத்பாலா.
மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுகான செய்திப் படங்களையும், முன்னனி பிராண்டுகள் பலவற்றின் விளம்பரங்களையும் இயக்கிய இவர், ஹிந்தியில் ‘ஹரி ஓம்’ என்ற இந்தோ ஆங்கில கூட்டுத் திரைபடத்தை மாற்று சினிமாவாக இயக்கினார். சர்வதேச அரங்கில் பாராட்டப்பட்டது இந்தப் படம்.
இதன்பிறகு எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘ பத்தொன்பதாவது கலை’ ( 19th step) என்ற திரைக்கதையை அதே தலைப்புடன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஜப்பான் ஆகிய நான்கு மொழிகளில் இயக்க முந்தயாரிப்பு பணிகளில் இறங்கினார். இதில் கமல் முக்கிய கதாபாத்திரத்திலும், ஜப்பானிய முன்னனி நடிகர் இரண்டாவது ஹீரொவாகவும், அசின் நாயகியாகவும் நடிக்க ஒப்புக் கொண்டனர். படப்பிடிப்பு தொடங்க இருந்த கடைசி நேரத்தில் கமல் படத்தில் இருந்து விலகினார். இதனால் படம் கைவிடப்பட்டதாக மீடியாக்கள் எழுதின. ஆனால் இந்தப் படம் கைவிடப் படவில்லை என்பதுதான் உண்மை.
கமல் கைவிட்ட இந்தப் படத்தில், கமல் ஏற்று நடித்த அதே கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்க, சுமார் 100 கோடி தயாரிப்பில், இந்தப் படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் ஹிந்தி, ஆங்கிலம், ஜப்பான், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்க இருக்கிறது. படத்துக்கு பழைய தலைப்பை சற்று மாற்றி “19 செப்டம்பர்” என்று வைத்திருகிறார்கள். தமிழ்பதிப்புககான திரைக்கதையை ஜெயமோகன் எழுதியிருகிறார். டிசம்பர் மாதம் மைசூரில் படப்பிடிப்பு தொடங்குவதாக பரத்பாலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜய் தேவ்கான் ஜோடியானார் தமன்னா
» கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
» டிஸ்னி பிரிமியர் ஷோவில் கமல் – அக்ஷரா
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» கமல் படத்தில் அஜித்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum