தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்தோஷ்சிவன் ஒரு மேஜிசியன் ! : மணிரத்னம்

Go down

சந்தோஷ்சிவன் ஒரு மேஜிசியன் ! : மணிரத்னம் Empty சந்தோஷ்சிவன் ஒரு மேஜிசியன் ! : மணிரத்னம்

Post  ishwarya Wed Apr 10, 2013 1:07 pm

இந்தியாவில் அதிகமுறை தேசிய விருதுகள் வென்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய படம் ‘உருமி’. மலையாளத்தில் வெளியான இப்படத்தின் தமிழ் டப்பிங் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவ 15) நடைபெற்றது.

மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், கவிப்பேரரசு வைரமுத்து, அரவிந்த்சாமி, எஸ்.ஜே.சூர்யா என தமிழ் திரையுலக முக்கிய பிரமுகர்கள் ஒன்று திரண்டு இப்படத்தின் இசையை வெளியிட்டார்கள்.

மூன்று பாடல்கள், இரண்டு டிரெய்லர்கள் திரையிட்டார்கள். ஒரு பாடலை ஹரிசரண், ஸ்வேதா மேனன் மேடையில் பாடினார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் பேசியது:

இயக்குனர் மணிரத்னம் : “என்னுடைய நெருங்கிய நண்பர் சந்தோஷ்சிவன். அவர் ஒரு மேஜிசியன் மாதிரி.. எப்போது அவரிடம் பேசினாலும் புதிதாக ஒரு 15 விஷயங்கள் பேசுவார். அவர் எனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும்பொழுது ஒரு சில காட்சிகள் இந்த மாதிரி வந்தால் நன்றாக இருக்கும் என்று நடித்து காட்டுவார்.

அவரே இப்போது நடிகராகி விட்டார். இந்த மாதிரி பிரம்மாண்டமான படத்தினை தனது ஒளிப்பதிவின் மூலம் கம்மியான பட்ஜெட்டில் எடுத்து இருக்கிறார். சந்தோஷ் சிவனை தவிர வேறு யாருக்கும் இது சாத்தியப்படாது.”

ஏ.ஆர்.முருகதாஸ்: ” தமிழ் திரையுலக இயக்குனர்கள் அனைவருக்குமே சந்தோஷ் சிவன் சாருடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கும். எனக்கு அந்த ஆசை இப்போது நிறைவேற இருக்கிறது என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன்.

‘உருமி’ படத்தினை ஹைதராபாத்தில் முதல் நாள் முதல் ஷோ தெலுங்கில் பார்த்தேன். பின்பு மலையாளம், தமிழ் என பார்த்தேன். இந்த படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.”

நடிகர் விஜய் : ” நான் இதுவரை சந்தோஷ் சாருடன் இணைந்து ஒரு படத்தில் கூட பணிபுரிந்தது இல்லை. முதன்முறையாக ஒரு படத்தில் பணிபுரிய இருக்கிறேன். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ‘உருமி’ படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ”

எஸ்.ஜே.சூர்யா : “இந்திய சினிமாக்களுக்கு உலக அரங்கில் அடைக்கப்பட்ட கதவுகளின் பூட்டை உடைந்து எறிந்தவர் சந்தோஷ் சிவன். அவர் ஒளிப்பதிவு செய்த ‘TERRIORIST’ படம் ஏகப்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இந்நேரத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒன்றை தெரிவித்து கொள்கிறேன். ‘தளபதி’ படத்தில் அதுவரை பார்த்திராத ரஜினியை தனது ஒளிப்பதிவு மூலம் காட்டினார் சந்தோஷ் சிவன். விரைவில் விஜய்யை வித்தியாசமாக காட்ட இருக்கிறார். ‘உருமி’ படம் கண்டிப்பாக வெற்றி படம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum