தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நச்சுன்னு ஒரு கேரக்டர் இருந்தா போதும்! – ஜனனி ஐயர்

Go down

நச்சுன்னு ஒரு கேரக்டர் இருந்தா போதும்! – ஜனனி ஐயர் Empty நச்சுன்னு ஒரு கேரக்டர் இருந்தா போதும்! – ஜனனி ஐயர்

Post  ishwarya Wed Apr 10, 2013 12:40 pm

பாலாவின் கண்டுபிடிப்பு. பட்டாம் பூச்சியாய் கண் துடிப்பு. மனசுல ஏதாவது சஞ்சலம்னா ஜனனி ஐயரை பார்த்துட்டு வாங்க. உற்சாகம் உடம்பெல்லாம் அப்பிக் கொள்ளும். அப்படியொரு ப்ரெஷ்னஸ். பரபரப்பாக அறிமுகமானவரைத் திரையில் காணவில்லையே என்று நேரில் தேடிச் சென்றோம்…

எங்க போனீங்க… படத்திலயும் பார்க்க முடியல?

ஸாரிப்பா… பொள்ளாச்சியில் ஒரு ஷூட்டிங்குல மாட்டிக்கிட்டேன். அமீரோட உதவி இயக்குநர் அஸ்லாம் டைரக்ட் பண்றார். படத்தோட பெயர் ‘பாகன்’. ஒரு கிராமத்துல நடக்கும் ரொமாண்டிக் காதல் கதை. என்னோட ஜோடி ஸ்ரீகாந்த். இடைவேளை வரைக்குமான படத்தை ஒரே ஷெட்யூலில் முடிச்சிட்டோம். அதான் இடையில் யார்கிட்டயும் பேச முடியாமப் போச்சு.

ஸ்ரீகாந்தோடு நடிப்பு அனுபவம் எப்படி?

வெரி நைஸ் மேன். புதுமுகம்னு பார்க்காமல் என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டார். நிறைய சொல்லித் தருவார். எங்க நின்னா கேமராவில் அழகா தெரிவேன்னு சொல்லுவார். அதே படத்துல நடிச்ச கோவை சரளா மேடமும் எனக்கு அவ்வளவு விஷயம் சொல்லித் தந்தாங்க.

பாலா படத்துல நடிச்சு பேர் வாங்கிட்டீங்க. மளமளன்னு படங்கள் பண்ணவேண்டாமா?

அய்யோ அப்படிப் படங்கள் பண்ணவே வேண்டாம். நச்சுன்னு ஒரு கேரக்டர். நறுக்குன்னு ஒரு கதை. அப்படித்தான் நான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். நிறைய சான்ஸ் வருது, நான்தான் ஒத்துக்கிறதில்ல.

இந்தப் படத்துல நடிக்கப்போறதை பாலா கிட்ட சொன்னீங்களா… கதையைக் கேட்டாரா?

என் கிட்ட டைரக்டர் அஸ்லாம் பேசினதுமே பாலா கிட்ட இப்படி ஒரு படம் பண்ணப் போறேன்னு சொன்னேன். யார் டைரக்டர், யார் ஹீரோனு கேட்டுட்டு ‘பெஸ்ட் ஆஃப் லக்’னு சொன்னார். கதையை எப்பவும் அவர் கேட்கவே மாட்டார்.

காஸ்ட்யூம் செலக்ஷனுக்கு எங்க போனீங்க?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை யூனிட் எனக்குத் தர்ற காஸ்ட்யூம்தான் போடுறேன். காரணம் கிராமத்துக் கதையா இருந்தாலும் நான் மாடர்ன் பொண்ணு. பணக்காரக் குடும்பம். அதனால அந்த லுக் வர்ற காஸ்ட்யூம்களை அவங்களே கொடுத்திடுவாங்க. ஆனா எனக்கு நானே போய் செலக்ட் பண்ணி வாங்க ஆசையாயிருக்கு. மும்பைக்கு ஒரு ரவுண்ட் காஸ்ட்யூம் பர்சேஸ்கே போகணும்னு நினைக்கிறேன்.

நடிகைகள்னா கிசுகிசு வரணும். வம்பு எழுதணும், நீங்க என்னடான்னா சைலண்ட்டா இருக்கிறீங்களே?

இதைக் கேட்காமல் நீங்களே ஒரு கிசு கிசு எழுதிக்கோங்க. ஐ டோண்ட் கேர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum