தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜித்தை ரஜினியாக்கும் ரசிகர்கள்!

Go down

அஜித்தை ரஜினியாக்கும் ரசிகர்கள்! Empty அஜித்தை ரஜினியாக்கும் ரசிகர்கள்!

Post  ishwarya Wed Apr 10, 2013 12:14 pm

ரஜினிக்கு செல்வாக்கை பலப்படுத்திய பல படங்களின் தலைப்புகளை கோடம்பாக்கத்தில் நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள். இந்த வியாபாரம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் பழைய படங்களை ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கே ரஜினி நடித்த கதாபாத்திரங்களை ரீபிளேஸ் செய்வதற்கு அஜித்தை விட்டால் ஆள் இல்லை என்கிறார்கள்.

ஏற்கனவே ரஜினியின் பில்லா ரீமேக்கில் நடித்த அஜித்துக்கு அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்! அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் பில்லா பாகம் இரண்டில் தற்போது நடித்து வருகிறார் அஜீத்.

பில்லா பாகம் இரண்டை தொடர்ந்து, ரஜினியின் எந்த படத்தில் அஜீத் அடுத்து நடிக்கலாம் என்று ஃபேஸ் புக் இணையதளத்தில் அஜித் ரசிகர்கள் கருத்து கணிப்பு நடத்தினார்கள். அவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் ரஜினி நடித்த பாட்ஷா படத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்து இருக்கிறது. பில்லா படத்தை போலவே பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜீத் நடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் தலயின் ரசிகர்கள்.

பில்லா பாகம் இரண்டு முடிந்ததும் அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். அந்தப்படத்தைத் தொடர்ந்து நாகிரெட்டி தயாரிக்கும் அஜீத் படத்தினை சிறுத்தை படத்தின் இயக்குனர், சிவா இயக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது அஜித் அலுவலக வட்டாரத்தில். அது பாட்ஷா படத்தின் ரீமேக்காக இருக்கலாமாம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum