நான் சிவனாகிறேன் – திரை விமர்சனம்
Page 1 of 1
நான் சிவனாகிறேன் – திரை விமர்சனம்
கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களை கொல்லும் சைக்கோ இளைஞன் கதை…
தாய் கள்ளக்காதலனுடன் ஓடியதால் சிறு வயதிலேயே மனநிலை பாதிக்கப்படுகிறான் பிரபாகர். வளர்ந்ததும் அது போன்ற பெண்களை தேடி பிடித்து கழுத்தை அறுத்து சாகடிக்கிறான். பதினான்கு கொலைகள் நடக்கிறது. தொடர் கொலைகளால் நகரம் அல்லோலப்படுகிறது.
கொலையாளி பிரபாகர் கம்பெனியொன்றில் வேலை பார்க்கிறான். மேலதிகாரி அனிதாவின் நடத்தைகள் தந்தையின் அன்பை ஞாபகபடுத்துகிறது. அவர் மேல் பிரியமாகி பின் தொடர்கிறான். ஒரு கட்டத்தில் கொலையாளி பிரபாகர் என்பது வர்ஷாவுக்கு தெரிய வர அதிர்ச்சி. அவன் எழுதி வைத்த கொலை பட்டியல் டைரியை திருடி போலீசில் ஒப்படைக்கிறாள்.
அதன் பிறகு நடப்பவை விறு விறுப்பான கிளைமாக்ஸ்… கொலையாளி பிரபாகராக வரும் உதய் கார்த்திக் தாடி, கண்ணாடி, முறைப்பு என அச்சு அசலாய் கேரக்டரில் பொருந்துகிறார். தீயவர்களை வதம் செய்யும் சிவனாக தன்னை கருதி தாண்டவம் ஆடுவது மிரட்சி.
அப்பாவியாக வரும் அவர் பயங்கர கொலையாளி என தெரியும் போது அதிர்ச்சி. பத்திரிகையாளர்கள் முன் விளக்கும் குழந்தை பருவ பிளாஷ்பேக் உருக்கம். அனிதாவாக வரும் வர்ஷா அம்சம். போலீஸ் அதிகாரியாக வரும் கார்த்திகேயன் கொலையை துப்பு துலக்குவது விறு விறுப்பு… காதல் சுகுமார் சிரிக்க வைக்கிறார்.
பிரபாகர் தந்தையாக வரும் பிரேம்குமார் அழுத்தம் பதிக்கிறார். நயானி தீட்சித் சூடேற்றுகிறார். மகன் மேல் கணவன் பாசம் காட்டுவதை தாய் வெறுப்பதில் லாஜிக் இல்லை. அழுத்தமான திரைக்கதையில் மர்ம முடிச்சுகளுடன் காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் வி.கே.ஞானசேகர். கே.எஸ்.மனோஜ் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன. கோகுல் ஒளிப்பதிவும் கச்சிதம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நான் மகான் அல்ல – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» விஸ்வரூபம் – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» விஸ்வரூபம் – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum