புடவை சாத்தும் வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
புடவை சாத்தும் வழிபாடு
புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மனை மனம் உருக வழிபடும் பெண்கள், அடிக்கடி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள புடவை சார்த்தி வழிபடுவதை மேற்கொள்கிறார்கள். புடவை சாத்தி வழிபட தனி கட்டணம் உண்டு. இந்த புடவைதான் அம்மனுக்கு சாத்த வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது.
80 ரூபாய் சாதாரண சேலையில் இருந்து 8 ஆயிரம் ரூபாய் வரையுள்ள பட்டுப்புடவை வரை பல வகை புடவைகளை பக்தர்கள் அம்மனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். தாங்கள் நினைத்து கொள்வது நிறைவேறியதும் புட்லூர் தலத்துக்கு வந்து இந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தவிர மற்ற நாட்களிலும் கூட இந்த வேண்டுதல் நிறைவேற்றப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 100 முதல் 120 சேலைகள் வரை குவிந்து விடுகிறது. அந்த சேலைகளை வெள்ளிக்கிழமை தோறும் கோவில் வளாகத்தில் வைத்து ஏலம் விடுகிறார்கள்.
அம்மனுக்கு சார்த்தப்பட்ட இந்த சேலைகளை வாங்க பெண்கள் மத்தியில் கடும் போட்டா போட்டி ஏற்படும். ஏனெனில் அந்த சேலைகளை வாங்கி அணிந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அடுத்த தடவை நீங்கள் புட்லூர் தலத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றால் அம்மன் சேலை பெற்று வரலாம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» புடவை சாத்தும் வழிபாடு
» புடவை தரும் அம்மன்
» பட்டுப் புடவை
» புடவை தரும் அம்மன்
» புடவை தரும் அம்மன்
» புடவை தரும் அம்மன்
» பட்டுப் புடவை
» புடவை தரும் அம்மன்
» புடவை தரும் அம்மன்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum