புடவை தரும் அம்மன்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
புடவை தரும் அம்மன்
திருச்சி உறையூரில் ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு உள்ள அம்பாளுக்கு, ஸ்ரீவளைகாப்பு நாயகி எனும் திருநாமமும் உண்டு. ஸ்ரீகுங்குமவல்லிக்கு காணிக்கையாக வந்த புடவைகளை, நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் பக்தைகளுக்குத் தருவார்கள்.
அதாவது தினமும் மாலை 6 மணிக்கு பூஜை நடந்து முடிந்ததும், பூஜையில் பங்கேற்றவர்களின் பெயர்களை துண்டுச்சீட்டில் எழுதி, குலுக்குவார்கள். இதில் யார் பெயர் வருகிறதோ அவர்களுக்கு அம்மனின் புடவையை வழங்குவார்கள். தினமும் 6 பெண்களுக்கு அம்மனின் புடவை வழங்கப்படும். 10-ம் நாளில் 54 பக்தைகளுக்கு புடவைகளை வழங்குவர்.
ஆக 108 பெண்கள் அம்மன் புடவையை பெறுவார்கள். இந்த புடவையை பூஜை அறையில் வைத்து வணங்கினால் மாங்கல்ய பலம் கிடைக்கும். கணவர் நீண்ட ஆயுள் வாழ்வார். நவராத்திரியின்போது தினமும் மகா சண்டி ஹோமம் நடைபெறும்.
கர்ப்பிணிகளும், திருமணத் தடையால் தவிப்பவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும் ஹோமத்தில் பங்கேற்று அம்மனை வணங்கினால் சுகப்பிரசவம் நிகழும், நல்ல வரன் அமையும், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» புடவை தரும் அம்மன்
» புடவை தரும் அம்மன்
» புடவை தரும் அம்மன்
» செல்வ வரம் தரும் திரெளபதி அம்மன்
» செல்வ வரம் தரும் திரெளபதி அம்மன்
» புடவை தரும் அம்மன்
» புடவை தரும் அம்மன்
» செல்வ வரம் தரும் திரெளபதி அம்மன்
» செல்வ வரம் தரும் திரெளபதி அம்மன்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum