தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேப்பஞ்சேலை பிரார்த்தனை

Go down

வேப்பஞ்சேலை பிரார்த்தனை Empty வேப்பஞ்சேலை பிரார்த்தனை

Post  birundha Tue Apr 09, 2013 9:35 pm


தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் நடைபெறாத மிகவும் வித்தியாசமான, வியப்பூட்டும் ஒரு பிரார்த்தனை பெரியபாளையத்தம்மன் கோவிலில் மட்டுமே நடைபெறுகிறது. அது வேப்பஞ்சேலை பிரார்த்தனை. குடும்பப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, உடல் நல பிரச்சினை இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும், "பவானி தாயே இந்த பிரச்சினையை நீ தீர்த்து அருள வேண்டும்.

உன் சன்னதிக்கு வந்து வேப்பஞ்சேலை அணிந்து, உன்னை வலம் வந்து வணங்குகிறேன்'' என்று பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், பெரியபாளையத்துக்கு வந்து வேப்பஞ்சேலை கட்டி கோவிலை வலம் வருவார்கள். ஆண், பெண் இருபாலரும் இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவதைக் காணலாம்.

இதில் ஈடுபடும் பக்தர்கள் வேப்ப இலைகளால் கட்டப்பட்ட கொத்துக்களை மட்டும் உடலை சுற்றி கட்டி கொண்டு கோவிலை வலம் வருவார்கள். இதன் பின்னணியில் ஒரு சம்பவம் கூறப்படுகிறது. ரேணுகாதேவி தனது அவதாரத்தின் இறுதியில் உடலில் தீ கொப்புளங்களுடன், ஆரணியாற்றின் கரையில் உடலில் துணி இன்றி ஒதுங்க நேரிட்டது.

அப்போது ரேணுகாதேவி வேப்ப இலைகளை பறித்து மாலைபோல கட்டி, தன் உடம்பை சுற்றி கட்டிக் கொண்டாள் என்பதை நீங்கள் இந்த புத்தகத்தின் முதல் பகுதியில் படித்து இருப்பீர்கள். இதை பிரதி பலிப்பது போலவே இந்த வேப்பஞ்சேலை பிரார்த்தனை உள்ளது. ரேணுகா தேவி போன்று பெண்கள் வேப்பஞ்சேலை அணிந்து வலம் வந்தால், பவானி அம்மன் உடனே மனம் இரங்கி அருள் பாலிப்பாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்பவர்கள் ஒரு சுற்று, மூன்று சுற்று சுற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சில பெண்கள் ஒன்பது சுற்றுக்கள் சுற்றுவது உண்டு. 108 தடவை வேப்பஞ்சேலையுடன் கோவிலை வலம் வருபவர்களும் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வட மாவட்ட மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து வேப்பஞ்சேலை பிரார்த்தனையை செய்கிறார்கள். வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்யும் பெண் பக்தர்களின் வசதிக்காக கோவில் அருகிலேயே மிகப் பெரிய கூடம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. *
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum