குழந்தைகளுக்கான உணவு
Page 1 of 1
குழந்தைகளுக்கான உணவு
குழந்தைகள் உணவு விஷயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய்ப்பால் நிறுத்திய பிறகு இரண்டு வருடங்களுக்கு கஞ்சி வகை உணவுகளை மிகவும் சிறந்தது ஆகும்.
குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, அரோரூட் கஞ்சி, பார்லிக் கஞ்சி, காரன்புளோர் கஞ்சி முதலியவற்றைச் சாப்பிட கொடுக்கலாம்.
அரிசிக் கஞ்சி
அரிசிக் கஞ்சி
பார்லிக் கஞ்சி
பார்லிக் கஞ்சி
ஜவ்வரிசிக் கஞ்சி
ஜவ்வரிசிக் கஞ்சி
அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி.
ஓமம்.
பால்.
சீனி.
செய்முறை:
புழுங்கல் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் வெயில் உலர்த்தி இரண்டாக உடைத்துத் தண்ணீர் விட்டு அரைத்து 15 கிராம் ஓமமத்தில் போட்டு நன்கு பிசறிக் காயவைக்க வேண்டும். பிறகு பாத்திரத்தில் கொட்டி பொன்னிறமாக வறுத்து, நன்றாகத் தேய்த்து ஊதி, ஓமத்தைப் போக்கி விட்டு, மாவாகத் திரித்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டும் போது கொஞ்சம் மாவைப் போட்டு தண்ணீர் விட்டு காய்ச்சி அதனுடன் பாலும், சீனியும் கலந்து சாப்பிட கொடுக்கலாம்.
பார்லிக் கஞ்சி
தேவையான பொருட்கள்:
பார்லி அரிசி.
பால்.
சீனி.
செய்முறை:
பார்லி அரிசியை இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவேண்டும். உடைத்ததிலிருந்து இரண்டு தேக்கரண்டி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி அதில் பால், சீனி கலந்து சாப்பிடக் கொடுக்கலாம்.
ஜவ்வரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி
செய்முறை:
ஜவ்வரிசி இரண்டு தேக்கரண்டி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைத்து வடிகட்டிய தண்ணீருடன் பால் சீனி சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.
அரோரூட் கஞ்சி
தேவையான பொருட்கள்:
அரோரூட் மாவு
செய்முறை:
அரோரூட் மாவை வேண்டிய அளவு குளிர்ந்த தண்ணீரில் கரைத்துப் பிறகு போதுமான அளவு தண்ணீர் விட்டுக் கட்டி படாமல் கிளறவேண்டும். கஞ்சிப் பதம் வந்ததும் சீனி போட்டுச் சாப்பிட கொடுக்கவேண்டும். கெட்டியாக இராமல் இந்தக் கஞ்சி தண்ணீர் பாகமாக இருக்கவேண்டும்.
தீரும் நோய்கள்:
காய்ச்சல், அஜீரணம், வயிற்றுப் போக்கு, மாந்தம் ஆகிய நோய்களை குறையச் செய்யும்.
இவை அனைத்தும் கஞ்சி வகைகள் ஆகும். இந்த கஞ்சி வகைகளை சரியான முறையில் குழந்தைகளுக்குச் சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நோயற்றும் காணப்படும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» குழந்தைகளுக்கான உணவு ஊட்டறீங்களா? பொறுமை தேவை….
» குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்.. குழந்தைகளுக்கான உணவு முறை.
» குழந்தைகளுக்கான சுயமுன்னேற்றக்கதைகள்
» குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்
» குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
» குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்.. குழந்தைகளுக்கான உணவு முறை.
» குழந்தைகளுக்கான சுயமுன்னேற்றக்கதைகள்
» குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்
» குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum