தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ இயக்குநரின் விளம்பர டெக்னிக்!

Go down

‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ இயக்குநரின் விளம்பர டெக்னிக்! Empty ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ இயக்குநரின் விளம்பர டெக்னிக்!

Post  ishwarya Tue Apr 09, 2013 1:54 pm

இன்று ஒரு படம் எடுப்பதை விட அதை திரைக்கு கொண்டு வருவதுதான் பெரும்
சவாலான விஷயம் என்பதை அனைத்து தயாரிப்பாளர்கள் அறிந்திருக்கிறார்கள்.
என்னதான் கதை நன்றாக இருந்தாலும் அதை மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பது அதை
விட சவாலானது, அதை நன்றாகவே புரிந்துகொண்டு அதற்கான பணிகளை திறம்பட செய்து
வருகிறார் ‘முப்போழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் இயக்குநரும்,
தயாரிப்பளருமான எல்ரெட் குமார். இவர் படம் இயக்குவது இதுதான் முதல் முறை
என்றாலும், ஒரு தயாரிப்பாளராக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’ ஆகியப்
படங்களை தயாரித்து மாபெரும் வெற்றியை பார்த்தவர்.


தற்போது இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் குமார், தனது முதல் படத்தை
மாபெரும் வெற்றிப் படமாக்க, கோடிகள் பலவற்றை செலவழித்ததுடன், படத்திற்கு
தேவையான விளம்பரங்களையும் பிரம்மாண்டமான முறையில் செய்து வருகிறார்.
இதற்காக இவர் படத்தின் பாடல்களில் ஒன்றான ‘ஒரு முறை…’ என்ற பாடலை
சென்னையில் வெளிட்டார். அதனைத் தொடர்ந்து அதே பாடலின் ரீ மிக்ஸ் வர்ஷனை,
அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் வெளியிட்டார். தற்போது மூன்றாவது
முறையாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறார்.

இந்த முறை படத்தின் அனைத்து பாடல்களையும் வெளியிட இருக்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் தாமரை
எழுதியிருக்கிறார். வரும் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு
நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் மேனன், கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட
அதை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் பெற்றுக்கொள்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum