உலகம் முழுவதும் புயலை கிளப்பிய “கொலவெறி” பாடலுக்கு விருது
Page 1 of 1

தனுஷ்
நடித்து ஜஸ்வர்யா இயக்கி தயாரித்த படம் “3”. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள
“ஒய் திஸ் கொலவெறி” பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த பாடலை தனுஷ் எழுதி அவரே பாடவும் செய்துள்ளார். அறிமுக இசை
அமைப்பாளர் அனிருத் முதல் படத்திலேயே “கொலவெறி” பாடலால் உச்சானிக்கு சென்று
விட்டார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே புகழின் உச்சானிக்கு
சென்ற இசை அமைப்பாளர் அனிருத்தான்.
“யு டியூப்” மூலம் இந்த பாடலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர்
கேட்டும், டவுன்லோடும் செய்துள்ளனர். உலக அளவில் அதிகம் வரவேற்பை, ரசிப்பை
பெறப்படும் பாடல்களுக்கு வழங்கப்படும் “யு டியூப் கோல்டு அவார்டு” என்ற
விருதுக்கு “கொலவெறி” பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் “3”
படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதுபற்றி இசை அமைப்பாளர் அனிருத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
“கொலவெறி” பாடல் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பது உண்மைதான்.
இந்த அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை அளிக்க
விழாவுக்கு ஏற்பாடு செய்வார்களா? என்பது எனக்கு தெரியாது. இந்த பாடலுக்கு
விருது கிடைத்திருப்பது எனக்கு மட்டுமின்றி பாடலை எழுதிய தனுஷ் உள்ளிட்ட
அனைவருக்குமே சந்தோஷத்தை அளித்துள்ளது.
பிரபல பத்திரிகையான “டைம்” இதழிலும் “கொலவெறி” பாடல் பற்றியும் “3” படம்
பற்றிய கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பத்திரிகையில் “ரோஜா”
படத்துக்கு பின்னர் 20 ஆண்டுகள் கழித்து ஒரு தமிழ் படத்துக்கு
முக்கியத்துவம் அளித்து கட்டுரை வெளியிட்டு இருப்பது “3” படத்துக்குதான்
என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கூறினார்கள்.
இந்த உண்மை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை மற்றொரு ஏ.ஆர்.ரஹ்மான்
என்று சிலர் பாராட்டுகின்றனர். அவருடன் என்னை ஒப்பிடுவதை நான்
விரும்பவில்லை. அவர் பெரிய சீனியர்ஸ். எனக்கு “இன்ஸ்பிரேஷன்” அவர்தான்.
அவரது ரசிகன் நான். அவர் சாதித்த அளவில் 5 சதவீதம் அளவுக்கு சாதித்தால்கூட
நான் சந்தோஷப்படுவேன். மகிழ்ச்சியுடன் “ரிட்டையர்டு” ஆவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
”கொலவெறி” பாடல் பற்றி தனுஷ் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:-
“கொலவெறி” பாடலின் வடஇந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
தமிழ்ப் பாடலை இந்த அளவுக்கு கொண்டு சென்ற உங்களை மறக்க மாட்டேன் என்று
குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷின் Why This கொலவெறி பாடலுக்கு Youtube இணையதளம் தங்க மெடல்!
» உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ராவணன்!
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரஜினியின் பாட்ஷா!
» நிலம் புயலை பயன்படுத்திக் கொண்ட மணிரத்னம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum