குப்பையில் புரண்டு, கூவத்தில் குளிக்கவும் தயாரா இருக்கேன்! – விக்ரம்
Page 1 of 1

‘கண்ணா…
ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ – குறும்பாகச் சிரிக்கிறார் விக்ரம்.
‘ராஜபாட்டை’ படத்தின் ஒரு அயிட்டம் ஸாங்குக்காக ஸ்ரேயா, ரீமாசென் என இரண்டு
ஆர்.டி.எக்ஸ்.- களுடன் இத்தாலி சென்று ‘கிக்’ரம்மாகத்
திரும்பியிருக்கிறார் விக்ரம்!
‘ஸ்ரேயா, ரீமா ரெண்டு பேருக்கும் பாஸ்போர்ட் இருக்கு. அவங்களையே
புக் பண்ணிக்கலாம்’னு நீங்கதான் டிக் அடிச்சு அவங்களுக்கு டிக்கெட்
வாங்கச் சொன்னீங்களாமே… அப்படியா?
ஐயையோ… இது என்ன புதுசா? இது எல்லாமே டைரக்டர் சுசீந்திரன் சாய்ஸ்.
நான்கூட இவங்க ரெண்டு பேருக்கும் போட்டி, ஈகோ இருக்குமோனு பயந்தேன். ஆனா,
அவங்க ஏற்கெனவே ஃப்ரெண்ட்ஸாம்! ஜீரோ டிகிரி குளிர்ல அவங்க ரெண்டு பேரும்
கட்டிப்பிடிச்சு வார்ம்- அப் பண்ணிக்குவாங்க. இவங்களுக்கு நடுவுல எப்படிப்
பிரச்சினை வரும்?
‘லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கிடைச்சாலக்கு லக்கு’னு பின்னி
எடுக்கிற மஜா பாட்டு. நானே பாடி இருக்கேன். ஸாங் ரொம்ப கிளாமராவே
இருக்கும். கோச்சுக்காதீங்க!
‘பிதாமகன்’ படத்தைத் தொடர்ந்து ‘தெய்வத்திருமகள்’ உங்களுக்கு தேசிய விருது வாங்கித் தரும்னு ஒரு பேச்சு. உங்க மனசு என்ன சொல்லுது?
நீங்க என் மேல வெச்சிருக்கிற இந்த நம்பிக்கையை நான் கனிவுன்னுதான் சொல்ல
முடியும். நான் எதையும் தீவிரமா எதிர்பார்த்து நிக்கிறது இல்லை. அப்படி
நின்னு எதிர்பார்த்து ஏமாந்த தருணங்களும் உண்டு. மனசைக் கொட்டி, உடலை
உருக்கி வேலை பார்த்துட்டு இருக்கிறப்ப அதுக்கான அங்கீகாரம் கிடைச்சா
யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. இப்போ ‘கிருஷ்ணா’வுக்கு டாட்டா
சொல்லிட்டு, என்னை சுசீந்திரன் ‘அனல் முருகன்’ ஆக்கி ஏழெட்டு மாசம் ஆச்சு.
எனக்கு ஒவ்வொரு படமும் ஒரு வாழ்க்கை. இப்படியே ஓடிட்டு இருக்கு உலகம்!
சமீபத்தில் பார்த்ததில் என்ன படம் பிடிச்சது?
பார்த்ததில் ‘மயக்கம் என்ன’ படத்தில் செல்வராகவனின் உழைப்பு தெரிஞ்சது.
ஒரு நடிகனுக்கு அவர் கொடுக்கிற ஸ்பேஸ் ரொம்பப் பெரிசு. தேவையானதோட கட்
பண்ணிட்டுப்போகாமல், இன்னமும் அனுமதிக்கிற இடம் அவர் படங்களில் நிறைய
இருக்கும். இதிலும் எனக்கு அப்படிப் பல இடங்கள் பிடிச்சது. எனக்கு ‘மயக்கம்
என்ன’ பிடிச்சிருக்கு!
கெட்டப் மாற்றம், உடம்பை வளைக்கிறது, உருவத்தை மாத்துறதுனு உங்க ஸ்டைலை இப்ப எல்லாரும் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்களே?
ஹேர் ஸ்டைல் மாத்துறதும், உடம்பை வெறுமனே ஏத்தி இறக்கிறதும் மட்டும்
வித்தியாசம் கிடையாது. நான் ஒரு படத்தின் கேரக்டரை மத்த படங்களோட
சம்பந்தப்படுத்திக்கொள்வதே இல்லை. ‘சாமி’ விக்ரம் ‘பிதாமகன்’ படத்தில்
இல்லை. ‘பிதாமகன்’ விக்ரம் ‘தெய்வத்திருமகள்’ல இருக்க மாட்டான். இப்படிக்
கூடுவிட்டுக் கூடுபாய்ற என்னோட பயணத்தை ஆரம்பிச்சு வெச்சது பாலாதான்.
எல்லோரும் என்னை எப்பவும் ஞாபகம் வெச்சிருக்கணும்.
விக்ரம்னு ஒருத்தன் இல்லாமல் போயிட்டாலும், என் சினிமா, என் நடிப்பு,
என் உழைப்பு, மக்கள் மனசில் இருக்கணும். அந்த ஒரு சந்தோஷத்துக்காக எவ்வளவு
வேதனையையும் அனுபவிப்பேன். குப்பையில் புரண்டு, கூவத்தில் குளிக்கவும்
தயாரா இருக்கேன். இதை நான் விரும்பிச் செய்றேன்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
» நாளைக்கே சாகத் தயாரா?
» அனுஷ்காவின் கவர்ச்சி விருந்தை ரசிக்க தயாரா?
» சோழ அரசராகும் விக்ரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum