பேபிகார்ன் ஃபிரை
Page 1 of 1
பேபிகார்ன் ஃபிரை
தேவையான பொருள்கள்:
பேபிகார்ன் = 250 கிராம்
கடலை மாவு = 75 கிராம்
மைதா மாவு = 75 கிராம்
இஞ்சி = சிறிதளவு
பூண்டு = சிறிதளவு
வெங்காயம் = 1
தக்காளி = 3
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = சிறிதளவு
செய்முறை:
பேபிகார்னை நன்கு சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும். பிறகு அதில் கடலை மாவு, மைதா மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
தக்காளியை நன்கு பிசைந்து கூழாக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கி பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி கூழ் சேர்த்து கிளறி பொரித்த பேபிகார்னை போட்டு தேவையான அளவு உப்பு கலந்து வதக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான பேபிகார்ன் ஃபிரை தயார். இதை எல்லா விதமான ரைஸோடும், சப்பாத்தி, பரோட்டா, நாண், நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
பேபிகார்னில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் 80 கலோரிகள் காணப்படுகிறது. மேலும் இதில் பொட்டாசியம், வைட்டமின் B6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது.
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ளது.
இதில் காணப்படும் ஃபைபரினால் மலச்சிக்கல் மற்றும் குடல் புற்று நோயை தடுக்கலாம். இதில் இருக்கும் கரோட்டினாய்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றும். இதய நோய், புற்று நோய் மற்றும் கண் புரை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum