தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை !

Go down

ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை ! Empty ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை !

Post  ishwarya Tue Apr 09, 2013 1:20 pm

ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை ! Ragaதான்
ரசிக்கும் தலைவர் மீது கொண்ட பாசத்தில் ரஜினிக்கு ராகவேந்திரர் சிலை
கொடுக்கிறார் சேலம் ரசிகர் கனகு. அப்பெரும் பாசத்தை உருக்கி ராகவேந்திரர்
சிலை வடிக்க பக்கபலமாக செயல்பட்டுள்ளார் சேலம் ரசிகர்.

சில மாதங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும்
அவரின் ரசிகர்கள் பால்குடம் தூக்கியது, அன்னதானம், ரத்ததானம், சிறப்பு பூஜை
செய்தது போன்றவை ஆங்காங்கே நடைபெற்று வந்தன. ஆனால் சற்று மாறுப்பட்டு
‘ரஜினி குணமடைந்து வந்தால் அவருக்கு ராகவேந்திரர் சிலை கொடுக்கிறேன் என்று
வேண்டிக்கொண்டிருக்கிறார் கனகு.



அவரின் வேண்டுதலுக்கு ஏற்ப ரஜினி குணமடைந்து சிங்கப்பூரில் இருந்து
தமிழ் மண்ணில் காலடி வைத்ததும் சிலை வடிக்கும் வேலையை தொடங்கிவிட்டாராம்.
சிலை செய்ய ஒன்றரை லட்சம் வரை செலவானதால், சேலம் ரஜினி ரசிகர்கள் பலரும்
இதற்கு உதவியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கனகு தனது பெயரை ‘ ராகவா கனகு ‘ என்று மாற்றிக் கொண்டாராம்.

“ரஜினிக்கு பிடித்த ராகவேந்திரர் சிலையை அவருக்கு அளிப்பதால்,
அவருக்கும் சந்தோஷம் எங்களுக்கு திருப்தி ” என்றார் மூத்த ரஜினி ரசிகர்
பழனிவேல். ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட ராகவேந்திரர் சிலை விரைவில் ரஜினி
வீட்டு பூஜையறையை அலங்கரிக்கும் என்கிறார்கள் சேலம் ரசிகர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum