பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலம் போட வேண்டும். சுற்றி செம்மண் பூச வேண்டும். வாசல் படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். நோன்புக்கு முதல் நாள், எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். கிழக்கு திசை நோக்கி பூஜை மண்டபம் அமைக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் மாக்கோலம் போட்டு, கலசம் வைத்து அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
முதல் நாள் இரவு கலசம் அமைக்க அம்மன் முகத்தையும், விளக்குகள் மற்றும் பூஜை பாத்திரங்களையும் நன்றாக தேய்த்து அலம்பி வைத்துக் கொள்ளுங்கள். அம்மனை அழைக்க வாசல் படியருகில் செம்மண் இட்ட கோலம் போட்டு அதன் மேல் பலகை வைத்து, பலகையில் கோலம் போட்டு மண்டபத்தில் வைத்து, அதன் மேல் தாம்பளத்தை வைத்து, தாம்பாளத்தில் கொஞ்சம் பச்சரிசியை பரத்தி வையுங்கள்.
கலச சொம்புக்கு சந்தன குங்குமம் இட்டு, பாதிக்கும் மேல் பச்சரிசி நிரப்பி, அதற்குள் இரண்டு வெற்றிலை இரண்டு பாக்கு, இரண்டு மஞ்சள் கிழங்கு, வெள்ளி காசு, ஒரு எலுமிச்சை, கருகமணி காதோலை ஆகியவற்றை இட்டு வையுங்கள். தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து, மாவிலையை கலச சொம்பில் அமைத்து சொம்பின் மேல் குடுமி மேல் பக்கம் இருக்குமாறு தேங்காயை வையுங்கள்.
அம்மன் முகத்தை அலங்காரம் செய்து கலசத் தேங்காய் மேல் பொருத்துங்கள். அம்மனுக்கு விதவிதமாய் அலங்கார பொருட்கள், நகைகள் ரெடிமேடாக கிடைக்கின்றன. அவரவர் ஆசைக்கும் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். மஞ்சள் பட்டுத் துணி சுற்றி வையுங்கள். இந்த சொம்பை அரிசி பரத்திய தாம்பாளத்தின் மேல் வைக்க வேண்டும்.
தாமரை, பூமாலை, தாழம்பூவையும் அம்மனுக்கு இருபுறமும் சாற்றி வைக்க வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். இது வாசல் படி அருகில் அமைத்திருக்க வேண்டும். அன்றிரவு வெண் பொங்கல், சாம்பார் மற்றும் பாயசம் சமைத்து நெய்வேத்தியம் செய்து உண்ண வேண்டும். மறுநாள் காலை (விரதத்தன்று) எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» சபரிமலையில் செய்ய வேண்டிய நியதிகள்
» 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்
» கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்
» பூஜைக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள்
» சபரிமலையில் செய்ய வேண்டிய நியதிகள்
» 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள்
» கோவிலுக்கு செய்ய வேண்டிய தானங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum