வாழைக்காய் பொடிமாஸ்
Page 1 of 1
வாழைக்காய் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 4
உளுத்தம் பருப்பு- 25 கிராம்
மிளகாய் – 8
நெய் – 100 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
கடலைப் பருப்பு – 50 கிராம்
துருவிய தேங்காய் – 150 கிராம்
வேகவைத்த துவரம் பருப்பு – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைக்காய்களை கழுவி துடைத்து விட்டு எண்ணெய் தடவி நெருப்பில் போட்டு நன்றாக சுட்டு எடுத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து அதனுடன் உப்பை சோக்கவேண்டும்.
வறுத்து அரைத்த பொடியை பிசைந்து வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்க்கவேண்டும். பின்னர் துருவிய தேங்காய் துருவலையும், வேகவைத்த துவரம் பருப்பையையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவேண்டும். இப்பொழுது சுவையான வாழைக்காய் பொடி மாஸ் தயார். இதை சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
மருத்துவக் குணங்கள்:
100 கிராம் வாழைக்காயில் இரும்புச் சத்து 6.3 மி. கிராம், போலிக் அமிலம் 16.0 மி.கிராம் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் காணப்படுகிறது.
போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் இரத்த சோகையை போக்க வாழைக்காய் மருந்தாக பயன்படுகிறது.
உளுந்தை தோலுடன் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும். இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.
உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
உளுந்தைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.
உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
» வாழைக்காய் பொடிமாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum