தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகனை வைத்து சொந்தப்படம் தயாரிக்க விஜயகாந்த் முடிவு!

Go down

 மகனை வைத்து சொந்தப்படம் தயாரிக்க விஜயகாந்த் முடிவு! Empty மகனை வைத்து சொந்தப்படம் தயாரிக்க விஜயகாந்த் முடிவு!

Post  ishwarya Mon Apr 08, 2013 2:45 pm

தனது மகன் சண்முகபாண்டியனை வைத்து சொந்தமாக படம் தயாரிக்க நடிகரும்,
தேமுதிக தலைவருமான விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். விஜயகாந்த் – பிரேமலதா
தம்பதியரின் 2வது மகன் சண்முக பாண்டியன். தற்போது இவர் சென்னையில் உள்ள ஒரு
கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சண்முகப்பாண்டியனுக்கு அப்பாவை போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.
இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அதனை உறுதி
படுத்தியிருக்கிறார் விஜயகாந்த்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், என் இரண்டு மகன்களில் சண்முக
பாண்டியனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இதற்காக
நடனம் மற்றும் சண்டை பழகி வருகிறான். அவனை கதாநாயகனாக நடிக்க வைத்து,
சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறோம். இதற்காக மூன்று நான்கு
கதைகள் தயாராக உள்ளன. அதில், ஒரு கதையை தேர்வு செய்து படமாக்க இருக்கிறோம்.
இந்த படத்தில் நான் கவுரவ வேடத்தில் நடித்து தருவதாக சொல்லியிருக்கிறேன்.
படத்தை வேறு ஒரு டைரக்டர் இயக்குவார். டைரக்டர் தேர்வு நடக்கிறது, என்று
கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum