தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கால்ஷீட் குளறுபடி: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்

Go down

கால்ஷீட் குளறுபடி: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல் Empty கால்ஷீட் குளறுபடி: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்

Post  ishwarya Mon Apr 08, 2013 2:17 pm

கால்ஷீட் குளறுபடி: நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல் D279afcd-06bb-4071-bb8d-55c24ee6fcd7_S_secvpfதமிழில்
முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. சூர்யாவுடன் ‘அயன்’, விஜய்யுடன்
‘சுறா’, கார்த்தியுடன் ‘பையா’, ‘சிறுத்தை’, தனுசுடன் ‘வேங்கை’ உள்ளிட்ட பல
படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.
இதனால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அங்கு கால்ஷீட்களில் குளறுபடி செய்வதாக தமன்னா மீது தயாரிப்பாளர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது,
தமன்னா ‘ராச்சா’, ‘எந்துகற்தே’, ‘பிரேமந்தா ரீபெல்’ ஆகிய மூன்று தெலுங்கு
படங்களில் நடிக்கிறார். இப்படங்களை முடித்து கொடுத்து விட்டுத்தான் வேறு
படங்களில் நடிப்பேன் என்று உறுதிமொழி அளித்து இருந்தார்.

ஆனால் இவற்றை முடிப்பதற்கு முன்பே மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க
புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
தமன்னாவின் கால்ஷீட் குளறுபடியால் ‘ராச்சா’ படம் முடியாமல் ஒரு மாதத்துக்கு
மேல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை
முடிக்கும்படி வற்புறுத்துகின்றனர்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகேஷ் பாபு படத்துக்கு
ஒப்பந்தமாகியுள்ளார் என்றார். இந்த குற்றச்சாட்டுகளை தமன்னாவின் தந்தை
மறுத்தார். தமன்னா ஒப்பந்தங்களை மீறவில்லை. மகேஷ்பாபு படத்தில் நடிப்பது
பற்றி இன்னும் முடிவாகவில்லை என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum