தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்று வலி! அமிதாப்பச்சனுக்கு ஆபரேஷன்!!

Go down

வயிற்று வலி! அமிதாப்பச்சனுக்கு ஆபரேஷன்!! Empty வயிற்று வலி! அமிதாப்பச்சனுக்கு ஆபரேஷன்!!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:26 pm

வயிற்று வலி! அமிதாப்பச்சனுக்கு ஆபரேஷன்!! Amitabh-bachchan-350x482வயிற்று
வலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு மும்பையில் ஆபரேஷன்
நடந்தது. நடிகர் அமிதாப் பச்சனுக்கு நீண்ட காலமாக வயிறு வலியால்
அவதிப்பட்டு வருகிறார். 1982ம் ஆண்டில் `கூலி படத்தின் படப்பிடிப்பில்
சண்டைக் காட்சியில் நடித்த போது அமிதாப்பச்சனுக்கு குடல் பகுதியில் பலத்த
காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் மாதக்கணக்கில் இருக்க
வேண்டியதாகி விட்டது. அப்போது அவர் நலம் பெற வேண்டி ஆஸ்பத்திரிக்கு வெளியே
திரண்டு நின்ற ரசிகர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு 2005ம் ஆண்டில் அமிதாப்பச்சன் மீண்டும் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
எனினும் அவர் வயிற்று வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து
அமிதாப்பிற்கு மீண்டும் ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி
நேற்று அவருக்கு ஆபரேஷன் நடந்தது. மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்
தற்போது அவர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum