வசந்த நவராத்திரிக்கு பூஜை செய்வது எப்படி?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1

அம்மன் அருளை பெற்றுத் தரும் விரத பூஜைகளில் நவராத்திரியும் ஒன்று. நவராத்திரியானது சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, மகா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு வகையாக கொண்டாடப்படுகிறது. இதில் வசந்த நவராத்திரி விழா இன்று (23-ந் தேதி) எல்லா அம்மன் கோவில்களிலும் தொடங்குகிறது.
31-ந்தேதி வரை 9 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த 9 நாட்களும் அன்னதானம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. வசந்த நவராத்திரியைச் சக்தி வழிபாடாக செய்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். வசந்த நவராத்திரியை எந்த குடும்பத்தில் கடைபிடித்துச் செய்தாலும் அவர்களுக்கு உள்ள கடன் தொல்லைகள் நீங்கிவிடும். கணவன் மனைவியரிடையே உள்ள பிணக்குகள் நீங்கி ஒரு இனிய வசந்தம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
பூஜை செய்யும் முறை.......
அஷ்டலட்சுமி வரையப்பட்ட கலசத்தில் அல்லது பித்தளை கலசச் சொம்பில் பஞ்சவர்ண நூல் சுற்றி பொட்டுக்கள் வைத்து வாசனை மலர்கள் உள்ள பூச்சரம் சுற்றி பிச்சை ரவிக்கை சாற்றி முப்பழம் வைத்து சர்க்கரை அன்னம் வைத்து, அன்றைய திதி- வாரம்- நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும்.
பிறகு உபசார பூஜைகள் செய்தபின் கை கூப்பியபடி ஓம் ஸ்ரீம் சர்வ மங்களதாயிணி துர்கே லட்சுமி சரஸ்வதி, வசந்த நவராத்ரசக்தினி, நவசக்தி ரூபிணி, ருணரோக நிவாரணி, புருஷ்த்வ தாரணீ, வேத வாக்ய ப்ரியதாயிணீ, ஸ்வாகதம் தேவி சௌக்யவர்ஷிணி.... சொல்லவும். பின், குங்குமத்தால் தேவிக்கு கலசத்தின் முன் அம்பிகையின் சோடச நாமாவளியை கூறி அர்ச்சனை செய்யவும்.
இந்த நாட்களில் வரும் பெண்களுக்கு மனையில் அமர்த்தி உபசாரம் செய்து தாம்பூலம் கொடுக்கவும். பூஜை அறையில், அம்பாள் படம், மகாமேரு, மங்களப் பொருட்களான சோப்பு, சீப்பு, கண்ணாடி, விரளி மஞ்சள், சங்கு, தீபம், தாமரை மலர் இவற்றைச்சுற்றிலும் வைக்கலாம். பத்து நாட்களும் நம்மால் இயன்ற வகையில் பூஜை செய்து இந்த வசந்த நவராத்திரியைக் கொண்டாடலாம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வசந்த நவராத்திரிக்கு பூஜை செய்வது எப்படி?
» எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது
» தெவசம் செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» தானம் செய்வது எப்படி?
» எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது
» தெவசம் செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» தானம் செய்வது எப்படி?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum