தெவசம் செய்வது எப்படி?
Page 1 of 1
தெவசம் செய்வது எப்படி?
தெவசம் செய்வது எப்படி?
* தலைவாசல் படிக்கு மாவிலை தோரணம் கட்டி மஞ்சள் குங்குமம் இடவும்.
* பூஜை அறையை தயார்படுத்தவும், பித்தளை பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் இடவும்.
* தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறை பெயரை அறியவும்.
* வாசலில் கால் அலம்ப வாளியில் நீர் மற்றும் சொம்பு வைக்கவும்.
* பூஜையின் போது பாதுகாப்பை முன்னிட்டு பாலியஸ்டர் துணிகளை உடுத்த வேண்டாம்.
* பூஜையின் போது பாரம்பரிய, கலாச்சார பருத்தி, கதர், பட்டாடைகளை உடுத்தவும்.
* தேவையான சில்லரை காசுகள் மற்றும் பட்டியலில் உள்ள பொருட்களை தயாராக வைக்கவும்.
* காய்கறிகள் (அகத்திகீரை நீங்கலாக) வசதிக்கேற்ப ஒற்றப்படையில் தானம் செய்தல் நன்று.
* மறைந்தவருக்கு பிடித்த காய்கறிகள், பழங்கள் தானம் செய்தல் நன்று.
* பூசணி, கீரை, வாழைப்பழத்தை பிளாஸ்டிக் பையில் வைக்கவேண்டும்.
* மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.
* மரமணை வைத்து அதில் அவர் பயன்படுத்திய துணி நகை, கண்ணாடி வைக்கவும்.
* 2 குத்து விளக்கு (ஒரு முகம் ஏற்றவும்) மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள் வைக்கவும்.
* தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழையிலை படையில் போடவும்.
* ஓட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக வீட்டில் சர்க்கரை பொங்கள் செய்யவும்.
* கோதுமை தவிடு-2 கிலோ, அகத்திகீரை, வெல்லம் -1 கிலோ, வாழைப்பழம் 3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.
* அன்றைய தினம் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யலாம். அது பெரிய புண்ணியமாகும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தானம் செய்வது எப்படி?
» வழிபாடு செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» பரிகாரம் செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» வழிபாடு செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» பரிகாரம் செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum