தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இணையதளங்களில் பில்லா-2 ஸ்டில்கள் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!!

Go down

இணையதளங்களில் பில்லா-2 ஸ்டில்கள் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!! Empty இணையதளங்களில் பில்லா-2 ஸ்டில்கள் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!!

Post  ishwarya Fri Apr 05, 2013 6:09 pm

இணையதளங்களில் பில்லா-2 ஸ்டில்கள் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!! Billa-2-movie-2012-latest-stills-billa-2-movie-2012-latest-stills-billa-2-movie-2012-latest-gallery-billa-2-movie-2012-latest-photo-billa-2-movie-2012-latest-stills-billa-tamil-movietamil-cinema-movie-350x231இணையதளங்களில்
பில்லா-2 பட ஸ்டில்கள் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியுள்ளது. பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக
பில்லா-2 படம் உருவாகி வருகிறது. அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன்
நடிக்க, உன்னைப்‌போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்குகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை
எட்டியுள்ள நிலையில் படத்தில் நடிகர், நடிகைகளின் கெட்டப்புகள் ரகசியமாக
வைக்கப்பட்டு இருந்தது.

இப்படத்தின் ஸ்டில்கள் பத்திரிக்கையாளர்களுக்கு இதுவரை அளிக்கப்படாத
நிலையில், பில்லா-2 படத்தின் ஸ்டில்களை யாரோ இணையதளங்களில் உலவ
விட்டுள்ளனர். மேலும் இணையதளங்களில் வெளியாகி இருக்கும் படங்கள் அஜித்
ரசிகர்களை எரிச்சல் அடைய செய்யும் அளவிற்கு வெளியாகி இருக்கிறது. அப்படி
என்ன ஸ்டில் என்று கேட்கிறீர்களா..? ஆணுக்கு பெண் வேடம் போட்டு படுக்கையில்
கிடத்தி வைத்திருப்பது போல ஒரு காட்சி. படுகவர்ச்சியான ஒரு பெண்ணுடன்
அஜித் நடனம் ஆடுவது போன்ற காட்சி என்று ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.

இது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இணையதளங்களில் இப்படி திருட்டுதனமாக ஸ்டில்களை உலவ விட்டது யார்
என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum