தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்படியா அசின்!?

Go down

அப்படியா அசின்!? Empty அப்படியா அசின்!?

Post  ishwarya Fri Apr 05, 2013 5:29 pm

நடிகை அசின் பாலிவுட்டில் என்ட்ரியானதில் இருந்தே சத்தம் இல்லாமல் சக்சஸ்
கொடுத்துக் கொண்டிருக்கிறார். அமீர் கான், சல்மான் கான் என பாலிவுட்
ஸ்டார்சுடன் கலக்கிய அசின் தற்போது ஷாருக்கானுடனும் நடிக்க இருக்கிறார் என
அரசல் புரசலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இந்த புகைச்சலில் இருக்கும் மற்ற பாலிவுட் நடிகைகளுக்கு பேரிடியாக
வந்திறங்கியிருக்கிறது அவர் அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் நடிக்க
ஒப்பந்தம் ஆன செய்தி. இதன் விளைவு அவரது புதிய படத்தைப் பற்றி பல்வேறு
தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன.
அதில் ஒன்று தான் அவர் டூ பீஸ் உடையில் நடிக்கிறார் என்ற செய்தியும்.
திரைப்படங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி அநாவசிய கிளாமர் காட்டாத
அசின் இந்த செய்தியால் எரிச்சலில் இருக்கிறார் என்கிறது விவரமறிந்த
வட்டாரம்.
மேலும் இந்த செய்தியை அசின் திட்டவட்டமாக மறுத்திருப்பதோடு, படத்தில் நான்
டூ பீஸ் உடையில் நடிக்கவில்லை. அப்படி நடித்திருப்பேன் என்ற ஆசையில்
யாரும் அந்த படத்தை பார்க்க வரவேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பு
வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்படியா அசின்!?..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum