தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போரூர் அருகே நடிகர் அர்ஜுன் கட்டும் ஆஞ்சநேயர் கோவில்: விரைவில் கும்பாபிஷேகம்

Go down

போரூர் அருகே நடிகர் அர்ஜுன் கட்டும் ஆஞ்சநேயர் கோவில்: விரைவில் கும்பாபிஷேகம் Empty போரூர் அருகே நடிகர் அர்ஜுன் கட்டும் ஆஞ்சநேயர் கோவில்: விரைவில் கும்பாபிஷேகம்

Post  ishwarya Fri Apr 05, 2013 5:24 pm

நடிகர் அர்ஜுன் சொந்த செலவில் போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில்
ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டுகிறார். கட்டுமான பணிகள் பல மாதங்களாக
விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இக்கோவிலில் நிர்மானிக்க ஒரே கல்லில் 28 1/2 அடி உயரம், 12 அடி
அகலத்தில் ஆஞ்சநேயர் உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை
பெங்களூரைச் சேர்ந்த பிரபல சிற்பி அசோக் கடிகர் செய்துள்ளார்.

160 டன் எடை கொண்ட இச்சிலை சமீபத்தில் கன்டெய்னர் லாரியில் ஏற்றி
கெருகம்பாக்கம் கொண்டு வரப்பட்டது. அச்சிலையை விரைவில் பீடத்தில் ஏற்றி
கும்பாபிஷேக விழாவை நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

இதுகுறித்து நடிகர் அர்ஜுன் கூறியதாவது:-

ஆஞ்சநேயர் சிலை 160 டன் எடையில் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி
பீடத்தில் நிர்மானிக்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் இப்பணிகள் முடிந்து
விடும். அதன்பிறகு கும்பாபிஷேக விழா நடத்தப்படும்.

சிலையை நிர்மானித்த உடன் கோவிலை சுற்றி சாலைகள், பூங்காக்கள் போன்றவை
அமைக்கப்படும். ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். அதன்
பிறகு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்
» திருமலையில் நடிகர் அர்ஜுன் வழிபாடு
» முல்லைப் பெரியாறு அருகே தமிழ் இயக்குனர்கள் 8ம் தேதி உண்ணாவிரதம்: நடிகர்- நடிகைகள் பங்கேற்பார்களா?
» சினேகாவுடன் விரைவில் திருமணம் நடிகர் பிரசன்னா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum