சினேகாவுடன் விரைவில் திருமணம் நடிகர் பிரசன்னா அறிவிப்பு
Page 1 of 1
சினேகாவுடன் விரைவில் திருமணம் நடிகர் பிரசன்னா அறிவிப்பு
சென்னை, நவ.9: நடிகை சினேகாவை பெற்றோர் சம்மதத்துடன் தான் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக நடிகர் பிரசன்னா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: நடிகை சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மை தான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிப்போம் என்றார் அவர்.
சினேகாவும், பிரசன்னாவும் "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் 2 மாதங்கள் நடந்தது. அப்போது சினேகாவும், பிரசன்னாவும் நட்புடன் பழகினர். நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது. இந்தச் செய்தியை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். மணிரத்னம் தயாரிப்பில் "ஃபைவ் ஸ்டார்' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பிரசன்னா அஞ்சாதே, முரண் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர். சுசிகணேசன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த "விரும்புகிறேன்' படத்தில் அறிமுகமானவர் சினேகா.
தற்போது சினேகா முரட்டுக்காளை ரீமேக், விடியல் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினேகா பிரசன்னா காதல் திருமணம்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
» நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடிகர் சித்தார்த் பேட்டி
» பிரசன்னா-ஸ்நேகாவின் திடீர் அறிவிப்பு
» பிரசன்னா-ஸ்நேகா திருமணம்
» பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம்
» நடிகை சமந்தாவுடன் விரைவில் திருமணம் நடிகர் சித்தார்த் பேட்டி
» பிரசன்னா-ஸ்நேகாவின் திடீர் அறிவிப்பு
» பிரசன்னா-ஸ்நேகா திருமணம்
» பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum