தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொண்டு நிறுவனம் தொடங்குகிறார் அஜித்!

Go down

தொண்டு நிறுவனம் தொடங்குகிறார் அஜித்! Empty தொண்டு நிறுவனம் தொடங்குகிறார் அஜித்!

Post  ishwarya Fri Apr 05, 2013 4:36 pm

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர் மன்றத்தை கலைத்த நடிகர் அஜித், தொண்டு நிறுவனம் தொடங்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது திரைப்படங்கள ரிலீஸ் ஆகும் நேரங்களிலும் சரி, தேர்தல் நேரங்களிலும் சரி… தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் இருப்பதையும், ரசிகர் மன்றம் என்ற பெயரில் தனக்கு விருப்பம் இல்லாத வேலைகளை செய்ததாலும் ரசிகர் மன்றங்களை கலைத்தார் அஜித்.

இந்நிலையில் அஜித்துக்கு தொண்டு நிறுவனம் தொடங்கும் எண்ணம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தன்னைத் தேடிவரும் மாற்று திறனாளிகள் யாராக இருந்தாலும் சாப்பிட வைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய செலவுக்குப் பணமும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அஜித். ராகவா லாரன்ஸ் நடத்தும் தொண்டு நிறுவனம் போல ஒரு டிரஸ்ட் நடத்தும் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum