தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிஷ்கினின் புதிய தயாரிப்பு நிறுவனம் ‘தனியான ஓநாய்’

Go down

மிஷ்கினின் புதிய தயாரிப்பு நிறுவனம் ‘தனியான ஓநாய்’ Empty மிஷ்கினின் புதிய தயாரிப்பு நிறுவனம் ‘தனியான ஓநாய்’

Post  ishwarya Sat Mar 16, 2013 2:13 pm

இயக்குனர் மிஷ்கின் இதுவரை பிற தயாரிப்பாளருக்குத்தான் படம் இயக்கிக் கொண்டிருந்தார். ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ படங்கள் சரியாக போகாததால் அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. என்றாலும், மிஷ்கின் யாரிடமும் வாய்ப்பு கேட்டுச் செல்லவில்லை.

இந்த நிலையில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளார். எதையும் வித்தியாசமாக செய்யும் மிஷ்கின் தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘லோன் வுல்ப்’ என்று பெயர் வைத்திருக்கிறார். ‘தனியான ஓநாய்’ என்று இதற்கு பொருள்.

இந்த பெயருக்கான காரணத்தை மிஷ்கின் விளக்கும்போது, "என்னை மிகவும் கவர்ந்த மிருகம் ஓநாய். அதன் குணங்கள் வித்தியாசமானவை. சுவாரஸ்யமானவை. பொதுவாக ஓநாய்கள் கூட்டமாக திரியும், கூட்டமாகவே வேட்டையாடும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் சில ஓநாய்கள் மட்டும் எந்த கூட்டத்துடனும் சேராமல் தன்னந்தனியே கம்பீரமாக வாழும். அவற்றைத்தான் 'லோன் வுல்ப்' என்று சொல்வார்கள்.அதன் குணமும், வாழ்க்கை முறையும் எனக்கு பிடிக்கும் என்பதால் அந்தப் பெயரை என் நிறுவனத்துக்கு வைத்துள்ளேன்.

எனது அடுத்த படத்தை என் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். நல்ல தரமான படங்கள் என் நிறுவனத்தில் இருந்து வரும். திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்" என்றார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum