சிம்கார்டு: நிபுணர் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை
Page 1 of 1

போலி ஆவணங்கள் மூலம் தீவிரவாதிகளும் சிம்கார்டு பெற்று வருவதால், சிம்கார்டு வழங்குவதற்கு முன்பு வாடிக்கையாளர்களை முறையாக அடையாளம் கண்டறியும் வகையில் புதிய நடைமுறை வகுக்கப்படுகிறது. இதற்காக நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
அபிஷேக் கோயங்கா என்பவர், உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
சிம்கார்டு வழங்குவதற்கு முன்பு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஏனென்றால், போலி ஆவணங்கள் மூலம் தீவிரவாதிகள் சிம்கார்டுகளை பெற் றிருப்பது, சமீபகால தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்போது தெரிய வந்தது.
சமீபத்தில், மும்பையிலும், டெல்லியிலும் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. அதுபற்றி நடைபெற்ற விசாரணையில், தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம்கார்டுகள், போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்டவை என்று தெரிய வந்தது.
எனவே, சிம்கார்டு வழங்குவதற்கு முன்பு அதை வாங்குபவரின் அடையாளங்களை சரிபார்ப்பது அவசியம். – இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சிம்கார்டு வழங்குவதற்கு முன்பு, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையாக சரிபார்ப்பது தொடர்பான புதிய நடை முறைகளை உருவாக்கக் கூட்டு நிபுணர் குழு ஒன்றை நீதிபதிகள் நியமித்தனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-
இக்குழுவில், மத்திய தொலைத்தொடர்பு துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர்கள் புதிய நடைமுறைகளை வகுத்து, 3 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திரைப்பட தணிக்கை குழுவை மாபியா கும்பல் என்று கூறுவதா?: டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» பாதுகாப்பான படிகட்டுகள் அமைக்க சில டிப்ஸ்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum