தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆசிய திரைப்பட விழாவில் விக்ரமின் தெய்வத்திருமகள்!

Go down

ஆசிய திரைப்பட விழாவில் விக்ரமின் தெய்வத்திருமகள்! Empty ஆசிய திரைப்பட விழாவில் விக்ரமின் தெய்வத்திருமகள்!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:04 pm

ஆசிய திரைப்பட விழாவில் விக்ரமின் தெய்வத்திருமகள்! Deiva-Thirumagal31விக்ரம்
நடித்த தெய்வத்திருமகள் படம், ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட
இருக்கிறது. விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலாபால், குழந்தை சாரா
ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் தெய்வத்திருமகள்.
இந்தப்படம் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் அதை மிக நேர்த்தியாக
எடுத்து இருந்தார் டைரக்டர் விஜய். அதிலும் குறிப்பாக விக்ரம் மற்றும்
குழந்தை சாராவின் நடிப்பு ரொம்ப பிரமாதமாக வந்திருந்தது. அனைவராலும்
பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில்
திரையிடப்பட இருக்கிறது.

இதுகுறித்து டைரக்டர் விஜய் கூறுகையில், ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில்,
உலக திரைப்பட பிரிவில் தெய்வத்திருமகள் படம் தேர்வாகி இருக்கிறது. மேலும்
இப்படம் விருதுக்கான பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. மார்ச் 15ம் தேதி
முதல் 18ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க நானும், விக்ரமும்
செல்கிறோம். தெய்வத்திருமகள் படம் “காட்ஸ் ஓன் சைல்டு” எனும் பெயரில்
ஆங்கில ‌சப் டைட்டிலுடன் திரையிடப்பட இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தெய்வத்திருமகள் படம் தென் கொரியாவில் நடந்த பூசன் சர்வதேச திரைப்பட விழாவிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum